இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றுவிட்டதால் மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் சென்றுவிட்டது. ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஏதர் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. அதற்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.


இந்த நிலையில், பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, எலெட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது ஓலா. எலெக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவை ஓலா தொடங்கியவுடன் பலர் போட்டிப் போட்டுக்கொண்டு முன்பதிவு செய்தனர்.




என்ன மாடல்? என்ன விலை?


இந்த நிலையில், ஓலா 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து அதற்கான விலை விபரங்களையும் வெளியிட்டது. அதன்படி S1 என்ற மாடல் ரூ.99,999-க்கும் S1 ப்ரோ மாடல் ரூ.1,29,222க்கும் விற்பனை செய்யப்படும் என ஓலா அறிவித்தது. இதற்காக ரூ.499 செலுத்தி செப்டம்பர் 8-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


எஸ் 1 மாடலின் சிறப்பு அம்சங்கள்:


முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட எஸ் 1 மாடல் ஓலா பைக்கை 121 கிலோ மீட்டர் வரை ஓட்டலாம் என்றும், அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது. 3.6 வினாடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஆக்சிலெரேட் ஆகும் இந்த பைக்கில் நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 2 விதமான மோடுகள் வழங்கப்பட்டு உள்ளன.


எஸ் 1 ப்ரோ மாடலின் சிறப்பு அம்சங்கள்:


அதேபோல், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட எஸ் 1 ப்ரோ மாடல் ஓலா பைக்கை 181 கிலோ மீட்டர் வரை ஓட்டலாம் என்றும், அதிகபட்சமாக 115 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது. 3 வினாடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஆக்சிலெரேட் ஆகும் இந்த பைக்கில் நார்மல், ஸ்போர்ட், ஹைபர் என 3 விதமான மோடுகள் வழங்கப்பட்டு உள்ளன.


பல வண்ணங்களில் பலபலக்கும் ஓலா பைக்:


ஓலா எலெக்ட்ரிக் பைக் 10 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Neo Mint, Coral Glam, Marshmellow, Porcelain White, Jet Black, Millenial Pink, Matt Black, Anthracite Grey, Midnight Blue, Liquid Silver என விதவிதமான வண்ணங்களில் ஓலா பைக்குகளை இனி சாலையில் பார்க்கலாம்.


ஆன்லைன், ஆப்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் பைக்குகளை மாதம் ரூ.2,999 செலுத்தி ஈ.எம்.ஐ. மூலம் வாங்கலாம் என ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 


 


Car loan Information:

Calculate Car Loan EMI