ஓலா நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர்கள் சமீப காலங்களாக தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஓலா நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநாத் மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த 24ஆம் தேதி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “வண்டியின் முன் பகுதி மெதுவான வேகத்தில் சென்றாலும் உடைந்துவிடுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகவே இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பை மாற்ற வேண்டும். அப்படி மாற்றி பலருடைய உயிரை விபத்திலிருந்து காப்பாற்றுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் அந்தப் பதிவில் மற்றொரு நபர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,“என்னுடைய ஓலா ஸ்கூட்டர் பைக் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றபோது ஒரு சுவற்றில் மோதி உடைந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் ஒருவர் ஓலா ஸ்கூட்டர் தொடர்பாக ஒரு புகாரை வைத்திருந்தார். அதில் அவருடைய ஓலா ஸ்கூட்டர் முழு வேகத்தில் முன் செல்வதற்கு பதிலாக பின்னால் சென்று கொண்டிருந்தது. இதன்காரணமாக ஏற்பட்ட விபத்தில் அவருடைய தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க:லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI