இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ராகுல், லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை பல்வேறு சொகுசுக் கார்களை வைத்திருக்கிறார்.
அவர் பெங்களூரில் சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் லம்போர்கினி சூப்பர் லக்ஸ், ஆஸ்டன் மார்டின் டிபி 11 போன்ற மற்றவரை பொறாமைப் பட வைக்கும் அளவுக்கு கார் கலெக்ஷன்கள் உள்ளன.
கே.எல் ராகுலும், அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவுகள் உறுதிப்படுத்தி இருந்தாலும், இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் உள்ளன.
களம், காதல், கார்கள் என எல்லாவற்றிலும் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு சொகுசாக இருக்கிறார் கே.எல்.ராகுல்.
ராகுல் வைத்துள்ள லம்போர்கினி ஹுராகன் ஸ்பைடர் கார் இருவர் மட்டுமே அமரும் ரகம். V10 இன்ஜின், 7 ஸ்பீடு க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் கொண்டது. இதன் விலை ரூ.4.10 கோடி.
லம்போர்கினி ஹுராகன் ஸ்பைடர் தவிர்த்து ராகுலிடம் ஆடி R8 கார் உள்ளது. இதன் விலை ரூ.2.30 கோடி. இதுவும் 2 பேர் அமரக் கூடியதே. இதன் நீளம் 4426 மிமீ. அகலம் 1940 மி.மீ. இதன் வீல் பேஸ் 2650 மிமீ கொண்டது. லிட்டருக்கு 5.71 கிலோ மீட்டர் ஓடக்கூடியது.
இதுமட்டுமல்லாது ராகுலிடம் பிஎம்டபிள்யு 5 சீரிஸ் கார் உள்ளது. இதன் விலை ரூ.63.90 லட்சம். லம்போர்கினி, ஆடி என்று வைத்திருந்தாலும் கூட கே.எல்.ராகுலின் ஃபேவரைட் இந்த பிஎம்டபிள்யு 5 சீரிஸ் தான் என்று கோரப்படுகிறது. இது 4.4L V8 இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உள்ளது.
ரேஞ்ச் ரோவர் வேலார்:
ராகுலிடம் உள்ள எஸ்யுவி ரேஞ்ச் ரோவர் வேலார் ரகம். இதில் V8 இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உள்ளது. இதன் விலை ரூ.1.02. கோடி.
மெர்சிடிஸ் சி43:
கே.எல்.ராகுலின் மெர்சிடிஸ் சி43 அவருடைய ஃபேரவைட்டில் இன்னொன்றாம். இதன் விலை ரூ.75 லட்சம். இதில் V6 இன்ஜின் உள்ளது. இந்த செடான் ரக கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது.
ஆஸ்டன் மார்டின் டிபி 11:
Car loan Information:
Calculate Car Loan EMI