Nissan Magnite Facelift 2024: நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரெடி..! விலை என்ன? கார் அறிமுகம் எப்போது?

Nissan Magnite Facelift 2024: இந்திய ஆட்டோமமொபைல் சந்தையில், நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Continues below advertisement

Nissan Magnite Facelift 2024: நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலின், உத்தேச விலை மற்றும் வெளியீட்டு தேதி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் 2024:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் கார் சிறிது காலமாகவே உள்ளது. அதற்கான முறையான ஃபேஸ்லிஃப்ட் தற்போது தயாராகி வருகிறது. ஸ்டைலிங் திருத்தங்கள் புதிய எடிஷனின் பேசும்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய மேக்னைட் கார்,  அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனத்தின் மாற்றங்கள் புதிய கிரில்லைச் சுற்றி வரும். புதிய ஹெட்லேம்ப்களுடன் புதிய பம்பர்களும் மாற்றியமைக்கப்படும்.

இதையும் படியுங்கள்: Updated Citroen Aircross: வந்தாச்சு அப்டேடட் சிட்ரோயன் ஏர்கிராஸ் எஸ்யுவி..! விலை என்ன? புது அம்சங்கள் எவ்ளோ இருக்கு..!

வடிவமைப்பு விவரங்கள்:

மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய அலாய் வீல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் பின்புற ஸ்டைலிங்கும் புதிய டெயில்-லேம்ப் டிசைன் மற்றும் புதிய பம்பருடன் மேம்படுத்தப்படும். இன்டீரியர்களும் முக்கியமாக புதிய டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரியுடன் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய ஆல்-பிளாக் தோற்றத்திற்கும் மாற்றாகும்.

டாஷ்போர்டு வடிவமைப்பு அப்படியே இருக்கும், ஆனால் சில புதிய உபகரணங்களுக்கு ஆதரவாக அம்சங்கள் பட்டியலை சிறிது மாற்றியமைக்கப்படலாம். பவர்டிரெய்ன்கள் அப்படியே இருக்கும், அதாவது அதே 1.0 லிட்டர் பெட்ரோல் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் யூனிட் AMT மற்றும் மேனுவல் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த 1.0l டர்போ பெட்ரோல் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் ஸ்டேண்டர்ட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கும்.

விலை விவரங்கள் என்ன?

இந்திய சந்தையில் ரூ.6 லட்சம் என்ற தொடக்க விலையி  நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் மலிவு விலை எஸ்யூவிகளில் ஒன்றாக Magnite உள்ளது. இந்நிலையில்  இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது சிறிய விலை உயர்வைக் கொண்டுவரலாம். இன்று வரையிலும் Magnite சிறந்த விற்பனையாகும் நிசான் நிறுவன கார் மாடல் ஆகும்.அண்மையில் தான் இந்த பட்டியலில் சமீபத்தில் அறிமுகமான X-Trail இணைந்தது.  மேக்னைட் இப்போது 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சந்தையில் உள்ளது. இது வரை இந்தியாவில் நிசானின் நிலையான விற்பனையாளராக உள்ள கார் மார் மாடலும் இதுவாகும். அடுத்த ஆண்டுக்குள் புதிய 7-சீட்டர் மற்றும் சிறிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த நிசான் நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது. வரும் நாட்களில் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விலை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola