Updated Citroen Aircross SUV: இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்ட சிட்ரோயன் ஏர்கிராஸ் எஸ்யுவி காரின் விலை உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
அப்டேடட் சிட்ரோயன் ஏர்கிராஸ் எஸ்யுவி:
சிட்ரோயன் C3 Aircross SUVக்கான குறிப்பிடத்தக்க மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் புதிய அம்சங்கள், புதிய இன்ஜின் விருப்பம் மற்றும் புதிய பெயர் ஆகியவையும் அடங்கும். அதன்படி, நிறுவனம் 'C3' முன்னொட்டை கைவிட்டு, அதற்கு 'Aircross SUV' என மறுபெயர் சூட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Aircrossக்கான விலைகள் இப்போது ரூ.8.49 லட்சத்தில் தொடங்கி, டாப்-ஸ்பெக் டர்போ-AT மாறுபாட்டின் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட Aircross க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விநியோகம் அக்டோபர் 8 முதல் தொடங்க உள்ளது.
வடிவமைப்பு விவரங்கள்
மறுபெயரிடுதலின் மூலம், அனைத்து சிட்ரோயன் சி-க்யூப் மாடல்களும் இப்போது ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளன. அதாவது அவற்றின் பெயர்களில் உள்ள 'C3' எனும் பொதுவான அடையாளம் கைவிடப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட ஏர்கிராஸ், அதன் புதிய அம்சங்களுடன், கடந்த மாத தொடக்கத்தில் பசால்ட் வெளியீட்டின், ஒரு அங்கமாக முதலில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிட்ரோயன் ஏர்கிராஸ் எஸ்யூவியின் புதிய அம்சங்கள்
ஏர்கிராஸில் உள்ள மிக முக்கியமான அப்டேட் என்பது, டாப்-ஸ்பெக் டிரிம்களில் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் LED ஹெட்லேம்ப்கள் சேர்க்கப்பட்டுள்ளது ஆகும். சிட்ரோயன் பின்புற பவர்-விண்டோ பட்டன்களை சென்டர் கன்சோலில் இருந்து பின்புற கதவு பட்டைகளுக்கு மாற்றியுள்ளது, பின்புற ஏசி வென்ட், பயணிகள் பக்கத்தில் ஒரு புதிய கிராப் ஹேண்டில், எலெக்ட்ரிகலி ஃபோல்டிங் விங் மிர்ரர்ஸ், ஒரு புதிய ஃபிளிப் கீ, பெரிய ஸ்லைடிங் ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றையும் பெறுகிறது. மேலும், டாஷ்போர்டில் சாஃப்ட் டச் மெட்டீரியலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் மிகவும் தாமதமாக வந்தாலும், SUVயின் மதிப்பை நிச்சயமாக மேம்படுத்தும். பாதுகாப்பு பிரிவில் சிட்ரோயன் அனைத்து இருக்கைகளுக்கும் 6 ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல்களை உருவாக்கியுள்ளது.
உட்புற இதர வசதிகள்:
10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை வாகனத்தில் உள்ள மற்ற அம்சங்களாகும். டாப்-ஸ்பெக் பிளஸ் மற்றும் மேக்ஸ் டிரிம்கள் மூன்றாவது வரிசை இருக்கைகளை பெற கூடுதலாக ரூ.35,000 செலவு செய்ய வேண்டி உள்ளது.
இன்ஜின் ஆப்ஷன்:
C3 ஹேட்ச்பேக்குடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 82hp, 115Nm 1.2-லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை, சிட்ரோயன் அப்டேடட் மாடலிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும் இந்த கார் மாடல், சிட்ரோயன் ஏர்கிராஸின் ஆரம்ப விலையை குறைக்க வாய்ப்பளித்துள்ளது. 110hp, 190Nm 1.2-லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் முன்பு போலவே தொடர்கிறது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. Aircross SUV ஆனது ஹூண்டாய் கிரேட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI