ரஜினி விரைவில் குணம்பெற முதலமைச்சர் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது - ஈபிஎஸ்


பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர் திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிக்கை


மதுக்கடைகளில் பில்


டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு Bill வழங்கும் நடைமுறை,  சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் தொடங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.


மீண்டும் குறைந்த தங்கம் விலை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.5,6400-க்கும்,  ஒரு கிராம் தங்கம் ரூ.7050-க்கும் விற்பனை. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஜம்மு & காஷ்மீரில் இறுதிகட்ட தேர்தல்:


ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ள சூழலில், 39 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மூன்று கட்டமாக பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை, வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.


ஒரே நாளில் ரூ.5 கோடி காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் மூலம் ரூ.5.05 கோடி காணிக்கையாக பெறப்பட்டது. 26,163 பேர் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது


நடிகரும், சிவசேன கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிரபாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் காலில் குண்டு பாய்ந்தது. மருத்துவர் புல்லட்டை அகற்றிவிட்டதாகவும், அவர் உடல்நிலை நன்றாக உள்ளது எனவும் தகவல்


கோமியம் குடித்தால் மட்டுமே அனுமதி..'


இந்தூரில் நவராத்தியை ஒட்டி நடைபெறும் 'கார்பா’ நிகழ்ச்சிக்கு 'கோமியம்' குடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறிய பாஜக நிர்வாகியால் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இந்துக்கள்தான் என்பதை இதன் மூலம் கண்டறிய முடியும் என கூறியுள்ளதால் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா?


இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை ஆல்-அவுட் செய்தால் மட்டுமே, இன்றைய போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். எனவே விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.


தந்தைக்கு மரியாதை செலுத்திய ரொனால்டோ


மறைந்த தனது தந்தையின் பிறந்தநாளில் அடித்த கோலை, அவருக்கே சமர்ப்பித்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. AFC சாம்பியன்ஸ் லீக்கின் Al Rayyan அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது அல் நசார் அணி. 76வது நிமிடத்தில் அணியின் 2வது கோல் அடித்து வெற்றி பெற வைத்தார் ரொனால்டோ