இந்தியாவில் பிரபலமடைந்து வரும் சீனாவை மையமாகக் கொண்ட பிரிட்டிஷ் கார் நிறுவனமாக எம்ஜி இன்று புது எஸ் யுவி ரக மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் இந்திய ரசிகர்களை கவரும் என எதிர்பார்ப்படும் நிலையில் புதுமாடல் குறித்த தகவல்களை பார்க்கலாம். 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய SUV மாடலாகவே இன்று வெளியாகவுள்ளது எம்ஜி குளோஸ்டர்.  சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என்ற 4 வகைகளில்  எம்ஜி குளோஸ்டர் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆதாருடன் இபிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி? செப்.1 கடைசி... இல்லையேல் பணம் எடுக்க, செலுத்த சிக்கல்!


இதில் சூப்பர் வேரியண்ட் 7 பேர் செல்லும் வகையில் உள்ளது. ஸ்மார்ட் மற்றும் சேவி மாடல்களில் 6 பேர் செல்லும் வசதி உள்ளது. ஷார்ப் மாடலில் மட்டும் 6 பேர் செல்லும் வசதியும் உண்டு. 7 பேர் செல்லும் வசதியும் உண்டு. விருப்பத்திற்கும் விலைக்கும் ஏற்ப அதனை வாடிக்கையாளர்கள் முடிவு செய்யலாம். 6 பேர் செல்லும் காருக்கும், 7 பேர் செல்லும் காருக்கும் லுக்கில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சேவி வகை கார்களின் உள்ளே சீட் வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவே 7 பேர் செல்ல வசதியாக உள்ளது. சூப்பர் வேரியண்டில் அடிப்படை மாடல் விலை ரூ. 29.98 லட்சமாக இருக்குமென கூறப்படுகிறது. அதேபோல் சேவி மாடலில் 6 பேர் அமர்ந்துசெல்லும் ஹை எண்ட் மாடலின் விலை ரூ.36.88 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்படுகிறது.




குளோஸ்டர் மாடலில் லெவல் ஒன் அடோனொமஸ் ட்ரைவிங் சிஸ்டம், அடோமெடிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், அடோமெடிக் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடுத் கனெக்டிவிட்டி, த்ரீ சோன் அடோ க்ளைமேட்டிக் கண்ட்ரோல், சன் ரூப், எல் இடி லென்ஸ் ஹெட்லைட், 19 இஞ்ச் அலார் சக்கரங்கள், எல் இடி டைலைட்ஸ் உள்ளிட்ட அசத்தலான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.  குளோஸ்டர் இரண்டு வகையான டீசல் எஞ்சினில் வெளியாகின்றது. 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் ஆகிய எஞ்சினில் வருகிறது. எம்ஜி கார்கள் ஏற்கெனவே இந்தியாவில் தங்களுக்கென தனி மார்கெட்டை பிடித்துள்ள நிலையில் குளோஸ்டர் மாடலும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது






Car loan Information:

Calculate Car Loan EMI