- தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:-
- கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
- மகாராடிரா, குஜராத், கர்நாடக மாநிலங்கள் நிதிநிலையை சரியாக கொண்டிருந்ததால் கொரோனா காலத்தில் சொல்லும் அளவிற்கு அவர்கள் நிதிநிலையை பள்ளத்தில் தள்ளவில்லை
- 2011-16ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 17ஆயிரம் கோடியாக இருந்தது
- 2016-21ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
- தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் உள்ளது
- தமிழநாடு அரசின் நிறுவனங்களான மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துக்கழகம் கடும் நிதிநெருக்கடியில் உள்ளது.
- தமிழ்நாடு அரசின் உற்பத்தியின் அடிப்படையிலான மொத்த வருமானம் 13.35 % இருந்த நிலையில் தற்போது 8.7% ஆக குறைந்துள்ளது
- தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது
- 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17,000 கோடியாக இருந்தது
- 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது
- பூஜ்ஜியவரியில் பயனடைவது ஏழை எளிய மக்கள் கிடையாது; ஜீரோ வரி முறையால் பணக்காரர்கள்தான்
- அரசிடம் வராத வரிவருவாய் பெரும் பணக்காரர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் தேங்கி உள்ளது; எனவே இவர்களிடம் வரியை முறையாக வசூலிக்கப்பட வேண்டும்
- மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் 1200 கோடியை செலுத்தவில்லை
- பொறுப்பான அரசு என்பது வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் உதவ வேண்டும்
- உலகப்பொருளாதார நெருக்கடி வந்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படும்
- அரசுப்பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் 59 ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
- மின் துறையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட இழப்பு 34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் ஆட்சியில் 1.34 லட்சம் கோடியாக உயர்வு
- இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை; இதுதான் முதல் வெள்ளை அறிக்கை- இனி வரும் காலங்களில் துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்
சொத்துவரி 2008ஆம் ஆண்டில் இருந்து மாற்றப்படவில்லை; சொத்துவரியை சட்டப்படி உயர்த்த வேண்டிய தேவை உள்ளது
எல்லோருக்கும் எல்லாம் இலவசம் என்றால் அதை எந்த அரசாங்கத்தாலும் வழங்க முடியாது
- இந்தியாவிலேயே சிறந்த நல்வாழ்வு திட்டங்களை கொடுக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்
- தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே இலவசங்களை வழங்க வேண்டும்; என்னை கேட்டால் இதைத்தான் முதல்வரிடம் சொல்லுவேன்
- தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சீர்கெட்டு இருக்கும் நிதிநிலையை 5 ஆண்டுக்குள் சரி செய்ய முடியும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது
- வெள்ளை அறிக்கையை காரணம்காட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் செல்லமாட்டோம்