Hyundai Venue diesel vs rivals: ஹுண்டாயின் புதிய வென்யு கார் மாடலின் டீசல் எடிஷன், போட்டியாளர்களுக்கு எப்படி ஈடுகொடுக்கிறது? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு டீசல் எடிஷன் Vs போட்டியாளர்கள்:
ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் பிரிவில் உள்ள டாடா நெக்ஸான், கியா சைரோஸ் போன்ற தனது போட்டியாளர்களை புதிய காம்பேக்ட் எஸ்யுவி எப்படி எதிர்கொள்ளும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். குறிப்பாக இன்ஜின் விவரங்கள், மைலேஜ் மற்றும் விலை ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டீசல் கார்கள் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தாலும், கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலானது பொதுமக்கள் தேர்வு செய்ய இன்னும் டீசல் கார்கள் இந்திய சந்தையில் கிடைப்பதை உறுதி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
வென்யு டீசல் எடிஷன் Vs போட்டியாளர்கள்: இன்ஜின்
ஹுண்டாயின் புதிய தலைமுறை வென்யுவானது, கியாவின் சோனெட் மற்றும் சைரோஸில் உள்ள பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை அப்படியே பின்தொடர்கிறது.
வென்யு டீசல் எடிஷன் Vs போட்டியாளர்கள்: மைலேஜ்
ஒரே மாதிரியான இன்ஜினை கொண்டிருந்தாலும், சைரோஸை காட்டிலும் வென்யு நல்ல செயல்திறனை கொண்டுள்ளது. ஆனாலும், இந்த ஒப்பீட்டில் டாடா நெக்ஸான் முதன்மையானதாக உள்ளது.
வென்யு டீசல் எடிஷன் Vs போட்டியாளர்கள்: விலை
புதிய வென்யுவின் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களை காட்டிலும், மஹிந்த்ராவின் XUV 3XO காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் மலிவானதாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI