New Hyundai Venue vs Rivals: ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆன வென்யு கார் மாடல், போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வந்தாச்சு ஹுண்டாயின் புதிய வென்யு
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஹுண்டாயின்வென்யு மாடலுக்கு, மிகவும் அவசியாமான அப்டேட் கொடுக்கப்பட வேண்டி இருந்தது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை வென்யு காரை அறிமுகப்படுத்தி, அதன் தொடக்க விலையை ரூ.7.9 லட்சமாக உற்பத்தி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதேநேரம், இந்த காரின் ஸ்போர்ட்டியர் எடிஷனான என் - லைன் எடிஷனும் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே, இந்திய சந்தையில் அதிகப்படியான போட்டி நிலவும் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகமாகியுள்ளது.
ஹுண்டாய் புதிய வென்யு Vs போட்டியாளர்கள்
இதன் காரணமாக டாடா நெக்ஸான், மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா, கியா சோனெட், கியா சைரோஸ், ஸ்கோடா கைலாக், மஹிந்த்ரா XUV 3X0, மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூசர் டெய்சர், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இவற்றை புதிய தலைமுறை வென்யு முறையாக எதிர்கொள்ளுமா என்பதை, விலை, மைலேஜ் மற்றும் டிசைன் விவரங்களை ஒப்பிட்டு இந்த தொகுப்பில் அறியலாம்.
புதிய வென்யு Vs போட்டியாளர்கள் - அளவீடுகள்
| அளவீடுகள் | வென்யு | சோனெட் | சைரோஸ் | நெக்ஸான் | ப்ரேஸ்ஸா | XUV 3XO | கைலாக் | மேக்னைட் | கிகர் | ஃப்ராங்க்ஸ் | டைசர் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நீளம் (மிமீ) | 3995 | 3995 | 3995 | 3995 | 3995 | 3990 | 3995 | 3994 | 3990 | 3995 | 3995 |
| அகலம் (மிமீ) | 1800 | 1790 | 1805 | 1804 | 1790 | 1821 | 1783 | 1758 | 1750 | 1765 | 1765 |
| உயரம் (மிமீ) | 1665 | 1642 | 1680 | 1620 | 1685 | 1647 | 1619 | 1572 | 1605 | 1550 | 1550 |
| வீல்பேஸ் (மிமீ) | 2520 | 2500 | 2550 | 2498 | 2500 | 2600 | 2566 | 2500 | 2500 | 2520 | 2520 |
| க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (மிமீ) | 190 | 205 | N/A | 208 | N/A | 201 | 189 | 205 | 205 | N/A | N/A |
| பூட் ஸ்பேஸ் (லிட்டர்) | 375 | 385 | 465 | 382 | 328 | 364 | 360 | 336 | 405 | 308 | 308 |
| சக்கர அளவு (இன்ச்) | 16* | 16 | 17 | 16 | 16 | 17 | 17 | 16 | 16 | 16 | 16 |
புதிய வென்யு பெட்ரோல் இன்ஜின் Vs போட்டியாளர்கள்
புதிய வென்யு பெட்ரோல் விலை Vs போட்டியாளர்கள்
புதிய வென்யு பெட்ரோல் Vs போட்டியாளர்கள் - மைலேஜ்
- புதிய தலைமுறை வென்யு இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 18.5 முதல் 20 கி.மீ., வரை
- கியா சோனெட் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 18.4 முதல் 19.2 கி.மீ., வரை
- கியா சைரோஸ் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 17 முதல் 18.2 கி.மீ., வரை
- டாடா நெக்ஸான் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 17.1 முதல் 17.44 கி.மீ., வரை
- மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு சுமார் 19 கி.மீ.,
- மஹிந்த்ரா XUV 3XO இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 18 முதல் 20 கி.மீ.,
- ஸ்கோடா கைலாக் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு சுமார் 19 கி.மீ.,
- நிசான் மேக்னைட் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு சுமார் 19 கி.மீ.,
- ரெனால்ட் கைகர் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு சுமார் 19 முதல் 20 கி.மீ.,
- மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு 20 முதல் 22 கி.மீ.,
- டொயோட்டா அர்பன் க்ரூசர் டெய்சர் இன்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் - லிட்டருக்கு சுமார் 19 முதல் 22 கி.மீ.,
Car loan Information:
Calculate Car Loan EMI