Citroen Basalt X: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகியுள்ள பசால்டின் புதிய X ரேஞ்ச் கார் மாடலின் முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சிட்ரோயனனின் அப்டேடட் பசால்ட் X எஸ்யுவி:

சிட்ரோயன் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட பசால்ட் கூபே எஸ்யுவியை, பசால்ட் எக்ஸ் என்ற பெயரில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.7.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் என் வேரியண்டானது கூடுதல் அம்சங்களை பெற்று, இரண்டு வேரியண்டிகளில் கிடைக்கிறது. அதில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ட்ரிம்மின் விலை ரூ.11.63 லட்சமாகவும், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ட்ரிம்மின் விலை ரூ.12.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசால்ட் எக்ஸ்-ன் ப்ளஸ் ட்ரிம் ஆனது ரூ.9.42 லட்சம் முதல் ரூ.12.07 லட்சம் வரையிலான வரம்பில் கிடைக்கிறது. 

பசால்ட் X எஸ்யுவி: விலையும், கூடுதல் அம்சங்களும்

வேரியண்ட் விலை
You 1.2L NA ரூ.7,95,000
Plus  1.2L NA ரூ.9,42,00
Plus  1.2L Turbo MT ரூ.10,82,000
Plus  1.2L Turbo AT ரூ.12,07,000
Max  1.2L Turbo MT ரூ.11,62,500
Max  1.2L Turbo AT ரூ.12,89,500

கூடுதலாக முறையே ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.21 ஆயிரம் என்ற தொகையை செலுத்துவதன் மூலம், முறையே 360 டிகிரி கேமரா மற்றும் டூயல் டோன் ரூஃப் பினிஷிங்கை பெற முடியும். பசால்ட் எக்ஸ் எஸ்யுவிகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் ரூ.11 ஆயிரத்தை செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சிட்ரோயனின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகவும்.

பசால்ட் X எஸ்யுவி: உட்புற, வெளிப்புற அப்டேட்கள்

வெளிப்புறத்தில் புதிய பசால்ட் எக்ஸ் மாடலின் டெயில்கேட்டில், X என்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அதைதவிர ஒட்டுமொத்த டிசைன் மற்றும் அளவீடுகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. உட்புறத்தில், பசால்ட் X மேக்ஸ் ட்ரிம் ஆனது, டேன் & ப்ளாக் அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்லேண்டட் பேட்டர்ன் இம்ப்ரிண்ட்ஸ் கொண்ட லெதரேட் வ்ரேப்ட் டேஷ்போர்ட் மற்றும் ப்ரோன்ஸ் நிறத்திலான ட்ரிம் பீஸ்களை கொண்டுள்ளது.

பசால்ட் X எஸ்யுவி - முக்கிய அம்சங்கள்

புதிய பசால்ட் எக்ஸ் மாடலில் கவனிக்கத்தக்க அம்சமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட CARA தொழில்நுட்பம் கருதப்படுகிறது. சிட்ரோயனின் புதிய கார் அசிஸ்டண்ட் இதுவாகும். ட்ராஃபிக் மற்றும் ரூட் ஆப்டிமைசேஷன், ரியல் டைம் ஃப்ளைட் ஸ்டேடஸ் ட்ராக்கிங், காலின் & SOS, மல்டிமீடியா சப்போர்ட், வெஹைகிள் ஹெல்த் ஸ்டேடஸ் அப்டேட் உள்ளிட்ட பல அம்சங்களை இந்த கார் வழங்குகிறது. அதேநேரம், இந்த அம்சமான ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுவதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் முன்பதிவு செய்யும் சில குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக உரிமையாளர்களின் விருப்பத்தின் பேரில் பெறக்கூடிய 360 டிகிரி கேமரா, ஆட்டோ டிம்மிங் IRVM, வெள்ளை ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், வெண்டிலேடட் சீட்ஸ், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் ஆகிய அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

பசால்ட் X எஸ்யுவி CARA-வின் பலன்கள்

இந்தியாவின் முதல் புத்திசாலித்தனமான கார்-இன்-கார் இண்டெலிஜெண்டாக கருதப்படும் CARA, வழக்கமான குரல் கட்டளை அமைப்புகளுக்கு அப்பாற்பட்டது. இது தொனி மற்றும் சூழலைப் புரிந்துகொள்கிறது. உதாரணமாக, "நான் சோர்வாக இருக்கிறேன்" என்று ஓட்டுநர் சொல்லும்போது ஓய்வெடுக்கும் யோசனையைத் வழங்கும்.

காருடன் ஆழமாக ஒருங்கிணைக்கிறது, டயர் அழுத்தத்தைக் கண்காணிக்கிறது, ஏசி அல்லது கதவு பூட்டுகள் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் நேவிகேஷன், அழைப்புகள், நினைவூட்டல்கள் மற்றும் இசையையும் கையாளுகிறது.  விமானங்கள், பங்குச் சந்தைகள், வானிலை மற்றும் கிரிக்கெட் ஸ்கோர்கள் குறித்த லைவ் அப்டேட்களை வழங்குகிறது. மிக முக்கியமாக, குரல் தூண்டப்பட்ட SOS, அவசர எச்சரிக்கைகள் மற்றும் விபத்து பதில் மூலம் பாதுகாப்பு குறிப்புகளும் கையாளப்படுகின்றன.

52 இந்திய மற்றும் சர்வதேச மொழிகளை ஆதரிக்கும் இந்த தொழில்நுட்ப அம்சமானது உரையாடலின் நடுவில் கூட மொழியை மாற்றும் வல்லமை கொண்டுள்லது. ஆரம்ப முன்பதிவுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டு,  MAX ஆட்டோமேடிக் வேரியண்டில் CARA இலவசமாக வழங்கப்படுகிறது.

பசால்ட் X எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்

மேம்படுத்தப்பட்ட பசால்ட் எக்ஸ் கார் மாடலின் மேக்ஸ் ட்ரிம்மில், அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினின் பயன்பாடு தொடர்கிறது. இது 110bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. எண்ட்ரி லெவல் ட்ரிம்களானது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தி 82bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. டர்போசார்ஜ்ட் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறுகிறது. அதேநேரம், இரண்டாவது இன்ஜின் ஆப்ஷனானது 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது.

பசால்ட் X எஸ்யுவி - பாதுகாப்பும், போட்டியாளர்களும்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பசால்ட் எக்ஸ் கார் மாடலில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பெரிமெட்ரிக் அலார்ம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலத்தை ஒட்டி விற்பனைக்கு வர உள்ள இந்த காரானது, உள்நாட்டு சந்தையில் டாடா கர்வ், ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதியின் க்ராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வாகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷக் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI