Bike, scooter sales February 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிப்ரவரி மாதத்தில் பதிவான, இருசக்கர வாகன விற்பனை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
இருசக்கர வாகன விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தை மாதா மாத மொத்த கார் விற்பனையில் தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2024 வரை, தொடர்ச்சியாக 14வது மாதமாக வாகன விற்பனை ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் பிப்ரவரி மாதத்தில் பதிவான, இருசக்கர வாகன விற்பனை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஆறு முக்கிய உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Hero MotoCorp: 4,45,257 units:
இந்தியாவில் இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் உள்ள Hero MotoCorp தொடர்ந்து தனது முதலிடத்தைப் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் ஜனவரி விற்பனை எண்ணிக்கையான 4,20,934 அலகுகளுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாத விற்பனை 5.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023க்கான அதன் விற்பனை எண்ணிக்கையுடன் (3,82,317 யூனிட்கள்) ஒப்பிடும் போது, அது 16.46 சதவ்கிதம் அதிகரித்துள்ளது.
Honda Motorcycle & Scooter India (HMSI): 4,13,967 units:
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதன்படி, ஜனவரி 2024-டன் (3,82,512 யூனிட்கள்) ஒப்பிடும்போது, பிப்ரவரியில் அந்நிறுவன விற்பனை 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023 காலகட்டத்துடன் (2,27,064 யூனிட்கள்) ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாத விற்பனை 82.31 சதவீதம் அதிகரித்துள்ளது.
TVS Motor Company: 2,67,502 units:
டிவிஎஸ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது. அதன் ஜனவரி 2024 விற்பனையான 2,68,233 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, 0.3 சதவிகிதம் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், ஓசூரை தளமாகக் கொண்ட அந்நிறுவனம் அதன் பிப்ரவரி 2023 எண்ணிக்கையான 2,21,402 யூனிட்களை விட, நடப்பாண்டில் 20.82 சதவிகிதம் கூடுதல் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையில் TVS இன் மின்சார இரு சக்கர வாகனங்களான - iQube e-ஸ்கூட்டர் ரேஞ்ச் மற்றும் விலையுயர்ந்த மற்றும் niche X ஆகியவற்றின் விற்பனை சேர்க்கப்படவில்லை.
Bajaj Auto: 1,70,527 units:
பஜாஜ் நிறுவனத்தின் ஜனவரி 2024 விற்பனையுடன் (1,93,350 யூனிட்கள்) ஒப்பிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 11.80 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம், அதன் பிப்ரவரி 2023 விற்பனையுடன் (1,20,335 யூனிட்கள்) ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரி மாத விற்பனை 38.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பஜாஜ் சேடக் இ-ஸ்கூட்டரின் விற்பனையும் இதில் அடங்கும்.
Suzuki: 83,304 units:
ஜனவரி 2024 இல் 80,511 யூனிட்களை விற்பனை செய்ததைப் போலவே, பிப்ரவரியிலும் 80,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. அதாவது அதன் விற்பனை 3.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் பிப்ரவரி 2023 விற்பனை எண்ணிக்கையான 52,451 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், சுசுகி கடந்த பிப்ரவரி மாதத்தில் 58.82 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது.
Royal Enfield: 67,922 units:
ஜனவரி 2024 இல் விற்பனை செய்யப்பட்ட 70,556 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த மாதம் 3.73 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும், அதன் பிப்ரவரி 2023 விற்பனை எண்ணிக்கையான 64,436 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரி மாத விற்பனை 5.41 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI