Royal Enfield Mileage: ராயல் என்ஃபீல்டின் மைலேஜில் அசத்தும் டாப் 4 மோட்டார்சைக்கிள் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ராயல் என்ஃபீல்ட் மைலேஜ்:


இந்திய சந்தையில் ரெட்ரோ பாணி அல்லது நியோ ரெட்ரோ பைக்குகள் என வரும் போது,  ராயல் என்ஃபீல்ட் மிகவும் பிரபலமான உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவன பைக்குகளின் பல அம்சங்கள் பற்றி குறைவாகவே விவாதிக்கப்படுகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று இந்த பைக்குகளின் மைலேஜ் ஆகும். இருப்பினும், பைக் வாங்கும் போது பெரும்பாலான இந்தியர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக மைலேஜ் உள்ளது. எனவே ராயல் என்ஃபீல்ட் பேட்ஜ் கொண்ட சில எரிபொருள் திறன் கொண்ட, பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 411


சென்னையை தளமாகக் கொண்ட உற்பத்தியாளரின் ஸ்க்ராம்ப்ளர்,  இந்திய சந்தையில் ஆஃப்-ரோடு திறன் கொண்ட பைக்குகளில் ஒன்றாகும். இது 411 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்ட் இன்ஜினுடன் வருகிறது, இது 24.3 பிஎச்பி பவரையும், 32 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த மாடலின் தொடக்க விலை இந்திய சந்தையில் 2.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு சுமார் 29 கிமீ மைலேஜை வழங்குகிறது


ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350


ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆனது நியோ-ரெட்ரோ வடிவமைப்பைப கொண்டுள்ளது. அதேநேரம்,  இது இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்த பைக்கில் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 349 சிசி இன்ஜின் இடம்பெற்று உள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 36.2 கிமீ மைலேஜ் தரும் என்று ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வாக்குறுதி அளிக்கிறது.


இதையும் படியுங்கள்: Mahindra Thar Armada 5-Door: புது லுக்கில் அசத்தும் தார் அர்மாடா 5 டோர் - நெருங்கும் வெளியிடு, கசிந்த புகைப்படங்கள்..


ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350


ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 ஆனது, கிளாசிக் 350க்கு மிகவும் ஒத்த வடிவமைப்பு மற்றும் உருவாக்கத் தரத்துடன் வருகிறது. பைக்கில் 349 சிசி ஏர்-ஆயில்-கூல்ட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பி ஆற்றலையும் 27 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 36.2 கிமீ மைலேஜை வழங்குகிறது


ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350


ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 என்பது அந்த பிராண்டின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் பைக் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 349 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் லிட்டருக்கு 36.5 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI