இந்தியாவின் புகழ்பெற்ற காராக திகழ்வது டொயோட்டோ ஃபார்ச்சுனர். இந்த கார் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காராக திகழ்கிறது. இந்த காருக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் புதிய காரை எம்ஜி நிறுவனம் தயாரித்து வருகிறது.
MG Majestor:
இந்தியாவில் சமீபகாலமாக மிகப்பெரிய சந்தையை தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் எம்ஜி. இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் MG Majestor. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த கார் உருவாக்கியுள்ளது. இந்த கார் அறிமுகமானால் ஃபார்ச்சுனர் காருக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயிலை இழுத்து அசத்தல்:
இந்த நிலையில், MG Majestor காரின் இழுதிறனை உலகிற்கு காட்டும் விதமாக அந்த நிறுவனம் புதிய முயற்சி எடுத்து அதில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. எம்ஜி மெஜஸ்டர்ரை கார ஒரு ரயில்வே ட்ராக்கில் ஏற்றி, அந்த கார் மூலமாக ஒரு பயணிகள் ரயிலையே கட்டி இழுத்துள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த ரயிலின் எடை 406.4 டன் ஆகும். அதாவது, 40 ஆயிரத்து 600 டன் கிழே ஆகும். இதன் மூலம் தனது இழுதிறனை எம்ஜி நிறுவனம் வெளிக்காட்டியுள்ளது.
இந்த புதிய வரலாற்றை படைத்திருப்பதன் மூலமாக MG Majestor கார் தனது வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் ஒரு எஸ்யூவி கார். இந்த கார் 2.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக இது உள்ளது.
கின்னஸ் சாதனை:
ரயிலை கட்டி இழுத்த MG Majestor காரின் இந்த புதிய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 215 எச்பி, 478 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இந்த கார் ஒரு ப்ரீமியம் எஸ்யூவி காராக தயாராகியுள்ளது. மொசைக் ஸ்டைல் கிரில், ட்ராகன் ஐ எல்இடி டிஆர்எல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 8 கியர்கள் உள்ளது. 12.3 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. வெலல் 2 அடாஸ் வசதி உள்ளது. 6 மற்றும் 7 சீட்டர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
விலை என்ன?
இந்த காரின் விலை ரூபாய் 40 லட்சம் முதல் ரூபாய் 45 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Majestor Sharp மற்றும் Majestor Savvy ஆகிய 2 வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 64 ஆம்பியன்ட் வண்ணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI