எஸ்யூவி கார்களின் தயாரிப்பும், விற்பனையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மஹிந்திரா  நிறுவனம் எஸ்யூவி கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து வருகிறது.

Continues below advertisement

Jetour T2:

இந்த சூழலில், மஹிந்திரா நிறுவனத்திற்கு சவால் தரும் வகையில்  JSW நிறுவனத்தின் Jetour T2 எஸ்யூவி ரக கார் தயாராகி வருகிறது. இந்த கார் உருவத்தில் டிஃபெண்டர் லேண்ட் ரோவர் காரைப் போன்ற தோற்றத்தில் உருவாகியுள்ளது. இதன் கம்பீரமான தோற்றமும், இதன் உட்கட்டமைப்பு வசதிகளும், வெளிப்புறத் தோற்றமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

விலை என்ன?

இதன் விலை ரூபாய் 30 லட்சம் முதல் ரூபாய் 45 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வேரியண்ட்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த காரில் 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த JSW Jetour T2 கார் 221 பிஎச்பி குதிரைத் திறனும், 390 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது.  இதன் ஹைப்ரிட் வேரியண்ட் 154 பிஎச்பி மற்றும் 220 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

Continues below advertisement

இதில் 26.7 கிலோவாட் எல்.எஃப்.பி. பேட்டரி பேக் உள்ளது. ஹைப்ரிட் வேரியண்டில் பேட்டரி மோடில் மட்டும் 139 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2 ஜன்னல் கதவுகள் மற்றும் 4 ஜன்னல் கதவுகள் வேரியண்டில் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

சிறப்புகள்:

இந்த 15.6 இன்ச் கொண்ட பெரிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீயரிங்கும் பவர்ஃபுல்லாக உள்ளது. வயர்லஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. காற்றைச் சுத்திகரிக்கும் வசதியும் உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 12 ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம் வசதி உள்ளது. 

இந்த கார் அறிமுகமானால் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நடப்பாண்டில் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த காரில் மொத்தம் எத்தனை வேரியண்ட்கள்? எந்த வேரியண்ட் என்னென்ன விலை? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் ஃபார்ச்சுனர் காருக்கு கடும் சவால் அளிக்கும் என்று கருதப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI