MG M9 Electric MPV: MG M9 மின்சார எம்பிவி 470 கிமீ ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG M9 மின்சார எம்பிவி
MG அதன் MG Select பிரீமியம் டீலர்ஷிப் சில்லறை விற்பனைச் சங்கிலியின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, இரண்டு கதவு மின்சார ஸ்போர்ட்ஸ் காரான சைபர்ஸ்டர், அதில் முதல் மாடல் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மாடலாக முழு அளவிலான ஆடம்பர MPV ஆக, கியா கார்னிவலுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்ட ஆல் எலெக்ட்ரிக் MPV ஆகும். M9 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கார் பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
MG M9 பேட்டரி விவரங்கள்:
M9 ஒரு பெரிய MPV ஆகும். அதன் உருவாக்கத்திற்கு ஏற்ப இந்த கார் ஒரு பெரிய பேட்டரி பேக்குடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு உகந்த வரம்பைக் கொடுக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இந்த காரில் இடம்பெறும் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தார் சுமார் 470 கிமீ அல்லது அதற்கும் அதிகமான பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
MG அதன் M9 கார் மாடலை, வரும் 17ம் தேதி தொடங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. பின்னர் நடப்பாண்டிற்குள் அந்த காரை அறிமுகப்படுத்தவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. MG M9 மாடல் காட்சிக்கு பெரியதாகத் தெரிகிறது. DRLகளின் பெரிய செட் இருக்கும் வேளையில், பவர் ஸ்லைடிங் கதவுகளும் இடம்பெற்றுள்ளன.
MG M9 வடிவமைப்பு விவரங்கள்:
மூன்று மண்டல காலநிலை கட்டுப்பாடு, இரண்டாவது வரிசை தனிப்பட்ட கேப்டன் இருக்கைகள், ஓட்டோமான் செயல்பாடு மற்றும் மசாஜ் செயல்பாடு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதால், கேபின் இந்த காரின் மிக முக்கிய பேசு பொருளாக உள்ளது. காரில் 8 மசாஜ் மோட்கள் உள்ளன. இரண்டாவது வரிசையில் தனியான டச்ஸ்க்ரீன் கண்ட்ரோலர் உள்ளது. மற்ற அம்சங்களாக பின்புற இருக்கை வெண்டிலேஷன் மற்றும் பின்புற பொழுதுபோக்கு திரைகளும் அடங்கும்.
MG M9 ஒரு பிரீமியம் தயாரிப்பாக இருக்கும். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா கார்னிவல் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டது.
தொழில்நுட்ப அம்சங்கள்:
காரில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, காற்றோட்டமான இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம். அதன் பாதுகாப்பு கருவியில் 7 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை இருக்கலாம்.
7 பேர் வரை சொகுசாக பயணிக்கக் கூடிய இந்த காரின் விலை, சுமார் 70 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI