கடந்த ஆண்டு, இந்தியன் 2 படத்தின் மூலம் ரசிகர்களை ஏமாற்றிய இயக்குனர் ஷங்கர் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தன்னுடைய மற்றொரு திரைப்படமான கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். இந்த படம் ஷங்கர் மற்றும் ராம் சரணை காப்பாற்றியதா? படம் எப்படி இருக்கிறது என பல ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 


கேம் சேஞ்சர் திரைப்படத்தில், ராம் சரண் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலியும், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்துள்ளனர். இவர்களை தவிர, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்ப்போம்.


ரசிகர் ஒருவர், தன்னுடைய விமர்சனத்தில் "இதுவரை, வேடிக்கையான மாஸ், மசாலா, பொழுதுபோக்கு திரைப்படம். மிகவும் அருமையாக உள்ளது. இயக்குனர் ஷங்கரின் தொழில்நுட்ப புத்திசாலித்தனம் பாராட்டுதலுக்குரியது என கூறியுள்ளார்.






இன்னொரு ரசிகர் போட்டிருக்கும் பதிவில், கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரணின் என்ட்ரி அருமை. கார்த்திக் சுப்புராஜினின் எதுத்து நன்றாக உள்ளது. இடைவேளைக்கு முந்தைய திருப்பம் அற்புதமாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது. இரண்டாம் பாதியின் ஃப்ளாஷ்பேக் சுவாரஸ்யமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.









மற்றொரு ரசிகரின் ட்விட்டர் விமர்சனத்தில், இப்படடிக்ற்க்கு 4 ஸ்டார்களை வழங்கி இது ஒரு புத்திசாலித்தனமான படைப்பு என புகழ்ந்து தள்ளியுள்ளார். 


மேலும் கேம்சேஞ்சர் படத்தில், ஏராளமான உயர்நிலைகள் உள்ளன. வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் கவர்ச்சிகரமான திருப்பத்துடன் கூடிய ஒரு மாஸ் எண்டர்டெய்னர்.


ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் வரும் காட்சிகள் அதிர வைக்கும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன, ராம்சரண் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். தமனின் பின்னணி இசை கதையை மேம்படுத்துகிறது, குறிப்பாக முக்கிய தருணங்களில் இசையில் படத்தை மெருகேற்றியுள்ளார்.


கியாராஅத்வானி படத்திற்கு நேர்த்தியைச் சேர்க்கிறது, அதே நேரத்தில்... எஸ்.ஜே.சூர்யா ஒரு வலுவான, தாக்கத்தை ஏற்படுத்தும் ரோலில் நடித்துள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளார்.