Bharat Mobility Global Expo 2025: பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போவை எங்கு? எப்போது? எப்படி? பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025:


இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியால், 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ வரும் ஜனவரி 17 முதல் ஜனவரி 22, 2025 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்த முக்கிய ஆட்டோமொபைல் நிகழ்ச்சியில், கார் தயாரிப்பாளர்கள் தங்களின் வரவிருக்கும் மாடல்களை, கான்செப்ட்களாக அல்லது உற்பத்திக்கு தயாராக உள்ள எடிஷன்களாக காட்சிப்படுத்துவார்கள். இதனுடன், பல முன்னணி பிராண்டுகள் விற்பனைக்கு தயாராக உள்ள தங்களது புதிய காரின் மாடல்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், நீங்கள் கலந்துகொள்ள திட்டமிட்டால். அதற்கு அறிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.



கண்காட்சி எங்கு நடைபெறும்? 


பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவின் அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டதன்படி,  2025 ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதேநேரம், துவாரகாவில் உள்ள யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மார்ட் ஆகியவற்றில் முறையே, ஆட்டோ எக்ஸ்போ உபகரண கண்காட்சி மற்றும் பாரத் கட்டுமான உபகரண கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.


எப்படி பயணிக்கலாம்?


எக்ஸ்போ தளவமைப்பின்படி, பாரத் மண்டபத்திற்கு அருகில் உள்ள மெட்ரோ நிலையம், ப்ளூ லைனின் ஒரு பகுதியான உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம் ஆகும். அங்கிருந்து, நீங்கள் கேட் 10 இலிருந்து எக்ஸ்போ நடைபெறும் பகுதியை அடைவதற்கான போக்குவரத்து சேவையை அணுகலாம். கூடுதலாக, கேப் சேவைகள் மற்றும் தனிப்பட்ட கார்கள் சேவைகளையும் பெறலாம்.


இருப்பினும், நீங்கள் டெல்லிக்கு வெளியில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்றால், பிரகதி மைதானம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. அதே சமயம் டெல்லி விமான நிலையம் பிரகதி மைதானத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. கூடுதலாக, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய இரண்டிலிருந்தும் மெட்ரோ சேவைகள் இருப்பதை கவனித்தில் கொள்ளுங்கள். தங்குமிடத்தைப் பொறுத்தவரை, பிரகதி மைதானத்திற்கு அருகிலுள்ள பயண முன்பதிவு இணையதளங்கள் மூலம் பகிரப்பட்ட அறை சேவைகளை வழங்கும் ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்யலாம்.


விலை & முன்பதிவு விவரங்கள்: 


2025 ஆட்டோ எக்ஸ்போவிற்கான நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் பார்வையாளர்கள் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து, தொடர்பு விவரங்கள், விரும்பிய வருகைத் தேதி மற்றும் பிற தகவல்களுடன் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். பார்வையாளர்களின் பொதுவான தேதிகள் ஜனவரி 19 முதல் ஜனவரி 22, 2025 வரை என்பதை நினைவில் கொள்ளவும். ஜனவரி 17 ஊடகவியலாளர்களுக்கான நாளாகும். அதே நேரத்தில் ஜனவரி 18 சிறப்பு அழைப்பிதழ்களைக் கொண்ட பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


கண்காட்சி பட்டியல்:


BMW, Porsche, Maruti மற்றும் Hyundai உட்பட 14 வாகன உற்பத்தியாளர்கள், 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாருதி இ விட்டாரா , ஹூண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் மற்றும் டாடா சியரா ஆகியவை காட்சிக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய மாடல்களில் அடங்கும் 


Car loan Information:

Calculate Car Loan EMI