பென்ஸ் ரக கார்கள் எப்போதும் கிளாசிகானவைகள். கார் ரகங்களில் செடான்(sedans) வகையான கார்களில் வசதியுடன தொழில்நுட்பமும் இணைந்தால் அது எஸ்.யூ.வி.க்களை விடவும் சிறப்பானதாக இருக்கும். செடான் ரக கார்களுக்கு பெயர்போன மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், இப்போது போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க பல புதிய அப்டேட்களை வழங்கிவருகிறது. E-Class மற்றும் S-Class ரக செடான்களை மிகச் சிறப்புடன் வழங்கி வந்த Mercedes-Benz தற்போது  C-Class ரக கார்களை அறிமுகம் செய்துள்ளது. Mercedes-Benz C-Class C300d என்ற புதிய செடான் ரக காரை அறிமுகம் செய்துள்ளது பென்ஸ் நிறுவனம். Benz C-Class-ல் C200, C220 d உள்ளிட்ட வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று வேரியன்ட் காரில் Mercedes- Benz C-Class C300d கார் பென்ஸின் உயர்ரக கார்களில் உள்ள தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிளாசியான கார் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விலையில் கிடைத்தால் அது உங்களுக்குத்தானே லாபாம்? Mercedes-Benz C-Class C300d-இல் என்னென்ன வசதிகள் இருக்கிறது, விலை என்ன போன்ற தகவல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.




Benz C-Class C300d  AMG-line trim உடன் இருப்பதால், இது ஒரு ஸ்போஸ்டி லுக், காராக இருக்கும். பர்ஃபாமன்ஸ் ரீதியிலாகவும் உங்களுக்கு இது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் போன்ற உணர்வை தரும். C300d கார் மாடல் வெளித்தோற்றத்தை பொறுத்தவகையில் கிளாசிக் லுக் உடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 65மிமி அகலமும் 4751மிமி நீளத்துடன்  இந்த மாடல் மற்ற டாப் கிளாஸ் கார்களை போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் ஒப்பாலைட் வெள்ளை, கெவன்சைட் நீலம், ஒபிசிடியன் கருப்பு  ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது. காரில் உட்புறத்தில், அதாவது இண்டீரியர் கருப்பு மற்றும் பிரவுன் நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் இண்டீரியர் லெதர் வேலைப்பாடுகளை உள்ளடக்கியதாகும்.




Benz C-Class C300d  மாடல் காரின் இண்டீரியர் வடிவமைப்பும் , இதில் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வசதியும் நிச்சயம் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கும். S-Class கார் மாடலில் உள்ளது போன்று 11.9 இன்ச் டிஸ்பிளே ஸ்கிரீன்  இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு லக்‌ஷரி காராக இருக்க வேண்டும் என்று இதில் பெரிய டிஜிட்டல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் க்ரோம், அலுமினியத்துடன் மெட்டலில் வீவ் செய்யப்பட்ட நல்ல டச் ஸ்கிரீன் இருக்கிறது.




இதைக் கொண்டு சன்ரூஃப் இயத்தை கன்ரோல் செய்யலாம். 3டி மேப் நெவிகேசன் வசதியுடன் உங்களுக்கு ஏற்ற ஒலி வசதிகளை அமைத்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. டிஜிட்டல் லைட்கள், டூ சோன் கிளைமேட் கன்ரோல், காரில் இருந்தபடி வானத்தைக் கண்டு ரசிக்கும் உதவும் சன்ரூப், எலக்ட்ரிக்கலாக உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள கூடிய வகையில் முன் இருக்கைகள், கிளாசிக் லெதர் வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டியரிங் என இதன் சிறப்ப்புகள் ஏராளம்.




புதிய சி கிளாஸ் ரக பென்ஸ் காரில் இடவசதி குறித்து கவலை வேண்டாம். இந்த ரக காரில் நிறைய பேர் அமருவதற்கும் பொருட்களை வைக்கவும் நல்ல வசதியாக இடம் இருக்கும். இது ஒரு ஸ்பேசியஸ் மற்றும் கம்ஃபடபுலான பயணதிற்கு ஏற்ற தேர்வாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.




C300d காரில் நான்கு சிலண்டருடன் 265bhp டீசல் எஞ்சின் உடன் 550 Nm டார்க்( torque) வருகிறது. இதில்  ஆடோமேட்டிக் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது.  இது 5.7 நொடிகளில் 0-100 km/h வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. இந்த புதிய மாடலில் கூடுதலாக  48v mild hybrid system  இருப்பதால் 20hp மற்றும் 200Nm டார்க் இன்னும் கூடுதாலக கிடைப்பதால், கார் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.




 இந்த கார் லைட் ஆகவும் அதேவேளையில் அதிக வேகத்தில் பயணிப்பதாகவும் இருக்கும். குறுகலா சாலைகள், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், கரடு முரடாக சாலைகள் என எதுவானாலும் அதில் ஸ்மூத்தாக செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டீசல் ரக காராக இருந்தாலும், மைலேஜ் மற்றும் செயல்பாடுகளில் எவ்வித குறையும் இல்லாமல், சூப்பரான பர்ஃபாமன்ஸ் கொண்டிருப்பது இதன் சிறப்பு.




C-Class பென்ஸ்-ஐ பொறுத்தவரை தரம், சிறப்பான கார் இண்டீரியர், தொழில்நுட்ப வசதிகள், சிறப்பான பயண அனுபவம் என எதிலும் சமரசம் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Mercedes-Benz C-Class C300 55 லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI