Maruti Fronx Price: பாதுகாப்பு தரம் உயர்த்தப்பட்டதே மாருதி சுசூகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மாருதி ஃப்ரான்க்ஸ் விலை உயர்வு:

இந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் போர்ட்ஃபோலியோவில் உள்ள கவனத்தை ஈரகக்கூடிய எஸ்யுவிக்களில் ஃப்ரான்க்ஸ் கார் மாடலும் ஒன்றாகும். கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரானது ஏற்றுமதியில் தொடர்ந்து அசத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 96 ஆயிரத்திற்கும் அதிகமான ஃப்ரான்க்ஸ் யூனிட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வெளிநாட்டு விற்பனையில் தொடர்ந்து அசத்தி வரும் இந்த காரின் விலையை தான் மாருதி சுசூகி நிறுவனம் தற்போது உயர்த்தி அறிவித்துள்ளது.

ஃப்ரான்க்ஸின் அனைத்து வேரியண்ட்களுக்கும் அப்கிரேட்: 

மலிவு விலைக்கு பெயர்போன மாருதி சுசூகி நிறுவனம், அண்மை காலமாக தரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ஏற்கனவே பலேனோ, XL6 மற்றும் எர்டிகா கார் மாடல்களின் அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர் பேக்குகளை ஸ்டேண்டர்ட் அம்சமாக அறிவித்ததை போல, தற்போது ஃப்ரான்க்ஸ் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் அதே அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சத்தை சேர்த்ததன் விளைவாகவே விலை உயர்வு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலகட்டத்திலேயே வெளிநாடுகளுக்கு ஒரு லட்சம் யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட கர் என்ற பெருமையும் இந்த காருக்கு  உள்ளது.

எவ்வளவு விலை உயர்வு?

புதிய அப்கிரேடை தொடர்ந்து இந்த காம்பேக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யுவியின் விலை, 2.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. அதன்படி 3 ஆயிரத்து 770 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரத்து 990 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

வேரியண்ட்கள் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
சிக்மா MT ரூ.7.54 லட்சம் ரூ.7.58 லட்சம் 3770

டெல்டா MT

ரூ.8.40 லட்சம் ரூ.8.84 லட்சம் 4200
சிக்மா சிஎன்ஜி ரூ.8.49 லட்சம் ரூ.8.53 லட்சம் 4245
டெல்டா+ MT ரூ.8.80 லட்சம் ரூ.8.84 லட்சம் 4400
டெல்டா AT ரூ.8.90 லட்சம் ரூ.8.95 லட்சம் 4450
டெல்டா+ (O) MT ரூ.8.96 லட்சம் ரூ.9.01 லட்சம் 4480
டெல்டா+ AT ரூ.9.30 லட்சம் ரூ.9.35 லட்சம் 4650
டெல்டா சிஎன்ஜி ரூ.9.35 லட்சம் ரூ.9.40 லட்சம் 4675
டெல்டா+ (O) AT ரூ.9.46 லட்சம் ரூ.9.51 லட்சம் 4730
டெல்டா + ஹைப்ரிட் MT ரூ.9.75 லட்சம் ரூ.9.80 லட்சம் 4875
ஜீடா ஹைப்ரிட் MT ரூ.10.58 லட்சம் ரூ.10.63 லட்சம் 5290
ஆல்ஃபா ஹைப்ரிட் MT ரூ.11.50 லட்சம் ரூ.11.56 லட்சம் 5750
ஜீடா ஹைப்ரிட் AT ரூ.11.98 லட்சம் ரூ.12.04 லட்சம் 5990

டெல்டா+ (0)  வேரியண்ட் அண்மையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி ஃப்ரான்க்ஸ் - இன்ஜின் விவரங்கள்:

இந்த காரில் 90bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், 100bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் நிலையானதாக வழங்கப்படுகிறது. அதேநேரம் பயனர்கள், 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர்  ஆட்டோமேடிக் (டர்போ பெட்ரோல் இன்ஜினில் மட்டும்) மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் (NA இன்ஜினில் மட்டும்) ஆப்ஷன்களையும் தேர்வு செய்யலாம். பெட்ரொல் எரிபொருளில் சுமார் 20 முதல் 23 கிலோ மீட்டரும், சிஎன்ஜி ஆப்ஷன் கிலோவிற்கு 28 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது மைல்ட் ஹைப்ரிட் ஆப்ஷனில் கிடைக்கும் ஃப்ரான்க்ஸ் கார் மாடல், அடுத்த ஆண்டு வலுவான ஹைப்ரிட் அம்சத்துடன் சந்தைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி ஃப்ரான்க்ஸ் - பாதுகாப்பு அம்சங்கள்:

இதுநாள் வரையில் ஃப்ரான்க்ஸில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், 360 டிகிரி கேமரா, குழந்தைகளுக்கான ISOFIX இருக்கை, EBD உடன் கூடிய ABS, ரிவெர்ஸ் பார்கிங் சென்சார்கள் மற்றும் ஹை ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் நல்ல ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் ஃப்ரான்க்ஸ் கார் மாடலில் ADAS போன்ற அம்சங்கள் இருப்பதால், ஜப்பான் பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஃப்ரான்க்ஸ் காரை விரும்புவது ஏன்?

கவர்ச்சிகரமான, ஸ்போர்ட்டி வாகன தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த உட்பகுதி, ஃப்ரான்க்ஸ் கார் மாடலை மக்கள் அதிகம் விரும்ப காரணங்களாக உள்ளன. கூடுதலாக செயல்திறன் மற்றும் எரிபொருள் பயன்பாட்டிலும் நல்ல சமநிலையை கொண்டுள்ளது. நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வார இறுதிகளில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளவும் இது சரியான தேர்வாக உள்ளது. கூடுதலாக மலிவு விலையில் கிடைக்கக் கூடிய மாருதி ப்ராண்டின் நம்பிக்கை, குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவையும் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் விற்பனையை ஊக்குவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI