இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனம். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.  இவர்களின் மிகப்பெரிய பட்ஜெட் விலை கார் இந்த Maruti Suzuki Wagon R. 

Continues below advertisement

Maruti Suzuki Wagon R Flex Fuel: 

தற்போது Flex Fuel கார் தயாரிப்பில் ஒவ்வொரு நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் Flex Fuel  காராக அறிமுகமாகியிருப்பது Maruti Suzuki Wagon R Flex Fuel ஆகும். இந்த காரை இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறப்புகள்:

இந்த காரில் என்னென்ன சிறப்பம்சங்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

இந்த காரில் 1.2 லிட்டர் கே சீரியஸ் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. 91 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ரிவைஸ்ட் இன்ஜெக்டர்ஸ், ப்யூல் பம்ப்ஸ், ப்யூல் லைன்ஸ் இதில் உள்ளது. ரிவொர்க்ட் இசியூ காலிப்ரேஷன், எத்தனால் சென்சார் எலக்ட்ரானிக்ஸ் வசதி இதில் உள்ளது.

விலை என்ன?

இந்த காரின் எக்ஸ் ஷோ ரூம் விலை 7.24 லட்சம் ஆகும். வழக்கமான Maruti Suzuki Wagon R காரைக் காட்டிலும் இந்த கார் சற்று அளவில் பெரியது. எத்தனால் அளவிற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. 

இந்த காரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

1. Wagon R Bioflex  - ரூபாய் 7.24 லட்சம்

2. Wagon R ZXi+ 1.2 MT - ரூபாய் 6.38 லட்சம்

வசதிகள்:

பார்க்கிங் சென்சார்ஸ், முன்பக்க முகப்பு விளக்குகள், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் இதில் உள்ளது. இந்த காரில் 7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த காரில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டூயல் டன் இன்டெரியர் ஃபினிஷ் வசதிகள் உள்ளது.  பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. இந்த கார் வர்த்தக பயன்பாட்டிற்கு அதாவது வாடகை கார்களில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூர் எச்3 ஆகிய காருக்கு மிகப்பெரிய சவால் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கார் நகர் பகுதிகளில் நெருக்கடியான போக்குவரத்தில் ஓட்டுவதற்கும் ஏற்ற காராக உள்ளது. இந்த காரின் விலையும் பட்ஜெட் விலையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள்  பலரும் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

Alto K10 : ‘ஒரு லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ நடுத்த மக்களின் நம்பிக்கை பெற்ற ஆல்டோ K10..!


Car loan Information:

Calculate Car Loan EMI