Kia Upcoming SUV: கியாவின் போர்ட்ஃபோலியோவில் சோனெட் மற்றும் செல்டோஸிற்கு இடையே, நிலைநிறுத்தப்பட உள்ள புதிய எஸ்யுவியின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

கியாவின் புதிய எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான முற்றிலும் புதிய எஸ்யுவியை விரைவில் அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. மலைப்பகுதிகள் போன்ற உயரமான சாலைகளில் புதிய வாகனத்திற்கான சாலை பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரின் வெளிப்புறம் முற்றிலுமாக மறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனையின் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளன. இதன் அளவீடுகளை கருத்தில் கொண்டால், சோனெட்டை விட பெரியதாகவும், செல்டோஸை காட்டிலும் சிறிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

கியா புதிய எஸ்யுவியின் டிசைன் விவரங்கள்

வெளிப்புறம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், தோற்றமானது அதன் வெளிப்புற டிசைன் தொடர்பான விவரங்களை தெளிவாக உணர்த்துகிறது. இந்த எஸ்யுவி ஆனது வெளிப்புறத்தில் நீளமான பின்புற கதவுகளையும், பெரிய அளவிலான பின்புறக் கண்ணாடி, நீட்டிக்கப்பட்ட கூரை ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த அளவீடுகளானது புதிய எஸ்யுவி சோனெட்டை காட்டிலும் கூடுதல் அளவீடுகளை பெற்றிருப்பதை உறுதியாக்குகின்றன. இதுபோக பின்புறமானது கியாவின் தற்போதுள்ள எஸ்யுவிக்கள் கொண்டிருப்பதை காட்டிலும், நிமிர்ந்த தோற்றத்தை கொண்டுள்ளது. இதனால் கேபினில் அதிக இடவசதி கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள கியா காம்பாக்ட் எஸ்யுவிகளை விட புதிய எஸ்யுவியின் பானட் தட்டையாகவும் கிடைமட்டமாகவும் காணப்படுகிறது. பக்கவாட்டு தோற்றத்தில் ரூஃப் ரெயில்களும் வழக்கமான கதவுக் கைப்பிடிகளும் தெரிய, அலாய் வீல்கள் முதல் தலைமுறை செல்டோஸ் காரிலிருந்து பெறப்பட்டதாக காட்சியளிக்கின்றன. டெயில்கேட் சோனெட் அல்லது செல்டோஸை விட அகலமாகவும் சதுரமாகவும் தோன்றுகிறது. 

கியா புதிய எஸ்யுவியின் அம்சங்கள், வசதிகள்

கியாவின் புதிய எஸ்யூவி சுமார் 4.1 முதல் 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம். குறிப்பாக, சைரஸ் மாடல் மிதமான வெற்றியைப் பெற்றிருப்பதைக் கருத்தில் கொள்ளும்போது, சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையே உள்ள கணிசமான இடைவெளியை புதிய கார் நிரப்பக்கூடும். அதன்படி இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் டெக்னாலஜி, 360-டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவற்றை உள்ளடக்கிய ஏராளமான அம்சங்கள் இடம்பெறலாம். SUV சந்தையானது பல அளவுப் பிரிவுகளில் பரந்து விரிந்துள்ள நிலையில், சோனெட் மற்றும் செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும் புதிய கார், நடுத்தர அளவு SUV பிரிவுக்குள் நுழையாமல், கூடுதல் கேபின் இடவசதி மற்றும் பிரீமியம் உபகரணங்களைத் தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ள கியா நிறுவனத்திற்கு உதவக்கூடும்.

கியா புதிய எஸ்யுவியின் பவர்ட்ரெயின் விவரங்கள்

பவர்ட்ரெய்ன் தேர்வுகள் வழக்கமானவையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கியாவின் பல எஸ்யுவியின் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன், 120 hp ஆற்றலை உருவாக்கும் தற்போதைய 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் பயன்படுத்தக்கூடும். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் மேனுவல், iMT, ஆட்டோமேட்டிக் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய விருப்பங்கள் இடம்பெறலாம். 

இதையும் படியுங்கள்: Maruti Celerio: 34KM மைலேஜ் தரும் மாருதியின் ஹேட்ச்பேக் - பட்ஜெட்டில் 3 ஸ்டார் ரேட்டிங், ரூ.9000 EMI திட்டம் - முழு விவரம்

புதிய கியா எஸ்யுவியின் விலை

கியா சோனெட்டின் தொடக்க விலை ரூ.7.33 லட்சமாகவும் (எக்ஸ் - ஷோரூம்), கியா செல்டோஸின் தொடக்க விலை ரூ.10.99 லட்சமாகவும் (எக்ஸ் - ஷோரூம்) உள்ளது. இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இடையே நிலைநிறுத்தப்பட உள்ளதால், கியாவின் புதிய எஸ்யுவியின் தொடக்க விலை சுமார் 8 லட்சம் ரூபாயில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI