Maruti Suzuki eVX: குஜாரத்தில் தங்களது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க,35 ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி செய்ய உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மாருதி சுசுகி eVX:


மாருதி சுசுகி இந்திய சந்தைக்கான தனது எதிர்கால மின்சார கார் மாடலான eVX-ஐ குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தியது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் eVX  விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. eVX தயாரிப்பின் மூலம் காம்பாக்ட் SUV பிரிவில் இந்திய சந்தைக்கு தனது முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனத்தை (BEV) அறிமுகப்படுத்தப்போவதாக கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. eVX மாடல் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.  இது 60kWh பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாருதி சுஸுகி தனது குஜராத் ஆலையில் புதிய உற்பத்தி வரிசைக்காக மேலும் ரூ.3,200 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதோடு, குஜராத்தில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.35,000 கோடி கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதையும் படிங்க: இது என்ன கார்-ஆ? இல்ல ரோபோ 2.0- ஆ? அசத்தல் அப்டேட்டில் கலக்கும் ஹோண்டா - சோனி!


10 லட்சம் யூனிட் உற்பத்தி:


eVX மாடலானது தனது உற்பத்தி நிலைக்கு தயாராக உள்ளது. குஜராத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டு இறுதிக்குள் இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கும் இந்த மாடல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் குளோபல் சிஇஓ தோஷிஹிரோ பேசுகையில், ”சுசுகி நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியை விரிவுபடுத்தும். நிறுவனத்தின் புதிய உற்பத்தி வரிசையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் எங்களது ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சங்களாக உயரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


eVX மாடலின் மாதிரி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான்  புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இப்போது குஜராத் முதலீட்டாளர்கள் மநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இது மாருதி சுசுகி நிறுவனம் SUV மாடலுடன் மின்சார வாகன சந்தையில் நுழைவதைக் குறிக்கிறது. போட்டி விலை நிர்ணயத்திற்காக eVX மிகவும் உள்ளூர்மயமாக்கலுடன் உற்பத்தி செய்யப்படுகிறது. eVX குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் உருவாக்கப்படும்.  இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படும் நிலையில்,  மாருதி சுசுகி eVX பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிங்க: ஆண்டு விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மெர்சிடஸ் - மொத்தம் எத்தனை யூனிட்கள் தெரியுமா?


Car loan Information:

Calculate Car Loan EMI