Mercedes SUV Sale 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மெர்சிடஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
விற்பனையில் மெர்சிடஸ் புதிய மைல்கல்:
Mercedes-Benz 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில், தனது அதிகபட்ச ஆண்டு விற்பனையை பதிவு செய்துள்ளது. முந்தைய 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023ம் ஆண்டில் மெர்சிடஸ் நிறுவனத்தின் விற்பனை 10 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. Mercedes-Benz இந்தியா நிறுவனம் 2022இல் 15,822 யூனிட்டுகளை விற்பனை செய்த நிலையில், 2023 இல் 17,408 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய கார் சந்தையில் இது ஒரு சிறிய சதவிகிதமாக இருந்தாலும், இந்தியர்கள் முன்னெப்போதையும் விட அதிக சொகுசு கார்களை வாங்குகிறார்கள் என்பதை இது வலுவாக உணர்த்துகிறது.
எஸ்யுவி விற்பனைகள் அமோகம்:
நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 55 சதவிகிதம் எஸ்யுவிக்களாக உள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட GLC மற்றும் GLE உடன் ஏற்கனவே உள்ள GLA மற்றும் GLS மாடல்களால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. மற்ற 45 சதவிகித விற்பனையும் செடான் பிரிவையே சேரும். அதில் எப்போதும் போல E-Class LWB மாடல் கார்தான் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. அதேநேரம், A-Class, C-Class E-Class மற்றும் S-Class ஆகிய மாடல்களும் கணிசமான விற்பனையை தக்கவைத்துள்ளன. நாட்டின் மொத்த மின்சார வாகன விற்பனையில், மெர்சிடஸ் நிறுவனம் 4 சதவிகிதம் பங்களித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். Mercedes-Benz இன் மின்சார வாகன போர்ட்ஃபோலியோ EQB SUV, EQE SUV மற்றும் EQS செடான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மெர்சிடஸ் நிறுவனத்தின் 2024 திட்டம்:
2024 ஆம் ஆண்டில், ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடஸ் மேபேக் உள்ளிட்ட அதன் டாப்-எண்ட் போர்ட்ஃபோலியோவில் இருந்து, 3 புதிய மின்சார வாகனங்கள் மற்றும் பல புதிய கார்கள் உட்பட 12-க்கும் அதிகமான தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஜெர்மன் கார் பிராண்டிற்கான நெட்வொர்க் விரிவாக்கம் என்பது 2024ல் 20 பணிமனைகளை துவக்கி, மேலும் 10 புதிய நகரங்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்துவதை உள்ளடக்கியுள்ளது.
மெர்சிடஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்:
Mercedes-Benz புதிய GLS ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தி தனது புத்தாண்டை தொடங்கியுள்ளது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் அதே வேளையில், வெளிப்புற மற்றும் உட்புறத்தில் பல புதிய மேம்படுத்தல்களையும் கொண்டு வந்துள்ளது. புதிய GLS பெட்ரோல் மற்றும் டீசல் மைல்டு ஹைப்ரிட் பொருத்தப்பட்ட இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது. புதிய GLS 450 4MATIC இன் விலை 1.32 கோடி ரூபாய் மற்றும் GLS 450d 4MATIC இன் விலை 1.37 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. GLS என்பது அவர்களின் முதன்மையான சொகுசு SUV ஆகும். இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய GLE SUV உடன் ஃபோர்ட்போலியோ வரம்பில் உச்சியில் அமர்ந்திருக்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI