Maruti Suzuki: ஜப்பானில் நடைபெற உள்ள மொபிலிட்டி நிகழ்ச்சியை முன்னிட்டு, சுசூகி நிறுவனம் தனது புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

மாருதி சுசூகியின் புதிய லோகோ

ஜப்பானைச் சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான சுசூகி, இந்தியாவில் மாருதி சுசூகி என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த, நிறுவனத்தின் லோகோ தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ள, தங்களது புதிய பேட்ஜை சுசூகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.  புதிய பேட்ஜ் ஆனது நீண்ட காலத்திற்கு வெறும் கான்செப்ட் டிசைனாக மட்டுமே இருக்கப்போவதில்லை. வரும் ஆண்டுகளில் உலகளவில் சுசூகி மற்றும் மாருதி சுசூகி வாகனங்களில் நிறுவனத்தின் அடையாளமாக இடம்பெற உள்ளது.

புதிய லோகோ என்ன?

சுசூகி நிறுவன லோகோவின் மையப்புள்ளியான “S” குறியீடு என்பது அப்படியே தொடர்கிறது. காரணம், இந்தியாவில் ஆல்டோ கார்களின் க்ரில்லில் இருந்தாலும் சரி அல்லது ஐரோப்பாவில் அவுட்போர்ட் மோட்டாரிலும் இருந்தாலும் சரி,  இந்த சின்னத்தின் மூலம் தங்களது கார்கள் உடையாளமாக அடையாளம் காணப்படுகிறது என்பதை சுசூகி நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தில், பழைய க்ரோம் - கனமான - 3 டைமன்ஷனல் தோற்றம் என்பது கைவிடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, தட்டையான மற்றும் கூர்மையான ஃபினிஷிங் உடன் பிரகாசமான சில்வர் பெயிண்டில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய லோகோவிற்கான தேவை என்ன?

புதிய லோகோவானது நடைமுறை காரணங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சிக்கலான மற்றும் மாசுபடுத்தும் செயல்முறைகளை உள்ளடக்கிய வழக்கமான குரோமியத்துடன் ஒப்பிடும்போது, சில்வர் பெயிண்ட் சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் முதல் இன்ஃபோடெயின்மென்ட் திரைகள் வரை பிராண்டுகள் இன்று அதிகமாக வாழும் டிஜிட்டல் தளங்களில் தட்டையான கிராஃபிக் சிறப்பாக செயல்படுவதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

டச் ஸ்க்ரீனின் முகப்பு திரையிலும், முன்புற பேனெட்டிலும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு புதியதாக “By Your Side” ஒரு கார்ப்ரேட் ஸ்லோகனையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய லோகோவை தோற்றத்தில் மேற்கொண்ட மாற்றமாக மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதில் அதன் நீண்டகால நம்பிக்கையின் நீட்டிப்பாகவும் வலியுறுத்தியுள்ளது.

ஓல்ட் ஸ்டைலை தொடரும் சுசூகி

கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வதுடன், பிராண்ட் அடுத்து எங்கு செல்ல விரும்புகிறது என்பதைக் குறிப்பதாக, புதிய தட்டையான லோகோவானது தொடர்ச்சி மற்றும் மாற்றம் இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.  மினிமலிசம் என்ற பெயரில் பழைய மையக்கருக்களை முற்றிலுமாக கைவிட்ட பல கார் தயாரிப்பாளர்களைப் போலல்லாமல், சுசூகி கவனமாக சமநிலையான முடிவை எட்டியுள்ளது. இதுகுறித்த விளக்கத்தில், “வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மதிப்புமிக்க தயாரிப்புகளை உருவாக்குவதற்கான சுசூகியின் நீண்டகால உறுதிப்பாட்டையும், எதிர்காலத்திற்கான புதிய சவால்களை எதிர்கொள்ளும் எங்கள் உறுதியையும் புதிய சின்னம் பிரதிபலிக்கிறது" என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI