Maruti Suzuki Fronx: கம்மி விலையில்..! 6 ஏர் பேக்குகளுடன் விற்பனைக்கு வந்த மாருதி ஃப்ரான்க்ஸின் புதிய டிரிம்கள்

Maruti Suzuki Fronx: மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் புதிய வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Continues below advertisement

Maruti Suzuki Fronx: மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் புதிய வேரியண்ட்கள், 6 ஏர் பேக்குகளை கொண்டுள்ளன.

Continues below advertisement

மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்:

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தங்களது வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், முன்னெப்போது இல்லாத அளவிற்கு தங்களது கார்களை பாதுகாப்பானதாக மாற்றி வருகிறது. இந்நிலையில் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின், புதிய டெல்டா+ (0)  வேரியண்டை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வேரியண்டில் 6 ஏர் பேக்குகள்:

புதிய டெல்டா+(0) வேரியண்டானது ஆட்டோமேடிக் மற்றும் மேனிவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. ஒது டெல்டா+ வேரியண்டிற்கு மேலே பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜிடா மற்றும் ஆல்ஃபா டிரிம்களில் மட்டுமே, 6 ஏர்பேக்குகள் நிலையாக வழங்கப்படுகின்றன. சிக்மா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வேரியண்ட்களில் 2 ஏர் பேக்குகள் மட்டுமே வழங்கப்டுகின்றன. இந்நிலையில் தான் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, டெல்டா+(0) இரண்டு வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி டிரைவர் ஏர்பேக், முன் இருக்கை பயணிக்கான ஏர் பேக், இரண்டு கர்டெய்ன் ஏர்பேக்குகள், டிரைவர் மற்றும் பயணிக்கான பக்கவாட்டு ஏர்பேக் வழங்கப்படுகின்றன.

காரின் வசதிகள்:

மருதி சுசுகியின் கிராஸ் ஓவர் எஸ்யுவி ஆன ப்ரான்க்ஸின் புதிய டெல்டா+(0) டிரிம்மில், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடுகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன் கூடிய 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காலநிலை கட்டுப்பாடு, மின்னணு முறையில் மடிக்கக்கூடிய ORVMகள், ESC, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 4- ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

விலை விவரம்:

புதிய ட்ரிம்மில் ஸ்பேர் வீலுக்கு பதிலாக டயர் பஞ்சர் ரிப்பேட் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இது 88.50bhp மற்றும் 113Nm ஆற்றலை வெளிப்படுத்துக்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களுடன் இந்த வாகனம் கிடைக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் எடிஷன் லிட்டருக்கு 21.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் எடிஷன் லிட்டருக்கு 22.89 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. புதிய வேரியண்டிற்கான விலையானது  8 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கி, 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளியான மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மாடலின், அனைத்து டிரிம்களிலும் 6 ஏர் பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் ஃப்ரான்க்ஸிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. அந்நிறுவனத்தின் ஃபோர்ட்போலியோவில் ஸ்விஃப்டிற்கு மேலே உள்ள, பலேனோவிற்கு மேலே ஃப்ரான்க்ஸ் கார் மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement