மாருதி சுசுகி நிறுவனம் நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தும் சாதாரண பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரையிலான கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாகவும் விற்பனை செய்த நிறுவனம் Maruti Ertiga.

Continues below advertisement

Maruti Ertiga:

மாருதி நிறுவனத்தின் இந்த Maruti Ertiga கார் ஒரு எம்பிவி கார் ஆகும். இந்த கார் 3 வரிசைகளை கொண்டது ஆகும். இந்த காரில் 7 இருக்கைகள் உள்ளது. பெரிய குடும்பத்தினர் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கார் இந்த கார் ஆகும். 550 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் திறன் கொண்டது.

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். இந்த கார் 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 102 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. மொத்தம் 9 வேரியண்டகள் Maruti Ertiga-வில் உள்ளது. 

Continues below advertisement

வேரியண்ட்கள்:

Ertiga LXi - ரூ.10.39 லட்சம்

Ertiga VXi - ரூ.11.67 லட்சம்

Ertiga VXi CNG - ரூ.13.29 லட்சம்

Ertiga ZXi - ரூ.13.47 லட்சம்

Ertiga VXi AT - ரூ.13.82 லட்சம்

Ertiga ZXi Plus - ரூ.14.29 லட்சம்

Ertiga ZXi CNG - ரூ.14.58 லட்சம்

Ertiga ZXi AT - ரூ.15.10 லட்சம்

Ertiga ZXi Plus AT - ரூ.15.92 லட்சம்

மைலேஜ்:

பெட்ரோல் வேரியண்டில் 20.51 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. சிஎன்ஜி வேரியண்டில் நகர்ப்புறங்களில் 18.01 கிலோமீட்டரும், நெடுஞ்சாலைகளில் 35.6 கிலோமீட்டரும் மைலேஜ் தருகிறது. 102 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 136.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹைப்ரிட் டெக்னாலஜி வசதியும் உள்ளது. 

சொகுசான இருக்கைகள்:

5 கியர்கள் மற்றும் 6 கியர்களும் கொண்ட வேரியண்ட்களும் இந்த காரில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் சுமூகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வாகனத்தின் சிறப்பம்சமே இதன் இருக்கைகள் ஆகும். இதன் இருக்கைகள் பயணிப்பதற்கு மிகவும் சொகுசாக அமைந்துள்ளது. இந்த இருக்கைகள் கால்களை நீட்டி அமர்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது. குரல் உத்தரவில் இயங்கும் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே டிஸ்ப்ளேவும் உள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதியும் இதில் உள்ளது.

பார்க்கிங் சென்சார், பனி காலத்திற்கான விளக்குகள், 4 ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ் இபிடி வசதியுடன் உள்ளது. ப்ரேக் அசிஸ்ட் வசதியும் உள்ளது. அதிவே அலர்ட் எச்சரிக்கையும் உள்ளது. டொயோட்டோ ரூமியன், மாருதி எக்ஸ் எல் 6, கியா காரென்ஸ் ஆகிய கார்களுக்கு இந்த கார் போட்டியாக அமைந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI