ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலக சந்தையில் ஒரு சக்திவாய்ந்த SUV-யை அறிமுகப்படுத்த உள்ளது. மஹிந்திராவின் XUV 700 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்டாக வரும் XUV 7XO-வின் அறிமுக தேதி என்ன.? அதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
XUV 7XO காரின் அறிமுகம் எப்போது.? விலை என்ன.?
XUV 7XO என அழைக்கப்படும் மஹிந்திரா XUV700 ஃபேஸ்லிஃப்ட், ஜனவரி 5-ம் தேதி இந்திய சந்தையிலும், உலக சந்தையிலும் அறிமுகமாகிறது. மஹிந்திரா 7XO-வுக்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. XUV700-இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகக் கூறப்படும் மஹிந்திரா XUV 7XO, XUV700-இன் அதே வாகனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV 7XO, டாடா சியரா, MG ஹெக்டர் மற்றும் ஹூண்டாய் அல்கசார் ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டியிடக்கூடும். மஹிந்திரா XUV700-இன் எக்ஸ்-ஷோரூம் விலை 13.66 லட்சம் ரூபாயில் தொடங்கி 23.71 லட்சம் ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. XUV 7XO புதிய ஸ்டைலிங் மற்றும் அம்சங்களுடன் வருகிறது, எனவே இந்த காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.
XUV 7XO காரின் அம்சங்கள் என்ன.?
இந்த கார் புதிய வெளிப்புற பாணியுடன் சந்தையில் நுழையும். இந்த புதிய மஹிந்திரா வாகனத்தில், புதிய ஹெட்லைட்கள், டெயில் லைட்கள் மற்றும் ஒரு கிரில் ஆகியவை இடம்பெறும். இது வாகனத்தின் தோற்றத்தை கணிசமாகன அளவில் கவர்ச்சிகரமாக மாற்றும்.
மஹிந்திரா XUV 7XO கார், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XEV 9e மற்றும் XEV 9S கார்களில் காணப்படும் மூன்று திரை அமைப்பை இந்த கார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹிந்திரா கார் 6 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்ட உள்ளமைவுகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 5 இருக்கைகள் கொண்ட மாடல் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
மஹிந்திரா XUV 7XO-வின் சக்தி
மஹிந்திரா XUV 7XO, XUV700 மாடலில் உள்ள அதே பவர்டிரெய்ன் விருப்பங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய SUV, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படலாம். இரண்டு எஞ்சின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸின் தேர்வுடன் வழங்கப்படலாம். டீசல் எஞ்சின் ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் வரலாம்.
மிஹிந்திரா நிறுவனங்களின் வாகனங்கள் ஏற்கனவே சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிதாக களத்தில் இறங்கும் XUV 7XO-வும் வாடிக்கையாளர்களை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI