Toyota 2025 Year End Discounts: டொயோட்டா நிறுவனத்தின் ஆண்டு இறுதி தள்ளுபடிகள் வாயிலாக, பல தரமான கார்களை குறைந்த விலையில் பயனர்கள் சொந்தமாக்கலாம்.

Continues below advertisement

டொயோட்டாவின் ஆண்டு இறுதி சலுகை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, நடப்பாண்டின் இறுதி மாதமான டிசம்பரில் தனது பல ப்ரீமியம் மற்றும் வெகுஜன சந்தைக்கான கார் மாடல்கள் மீது சலுகைகளை அள்ளி வீசியுள்ளது. எஸ்யுவி, லக்சரி எம்பிவி, ஹைப்ரிட் மற்றும் க்ராஸ்ஓவர் கார்கள் மீது பணத்தள்ளுபடி, எக்சேஞ்ச் சலுகைகள், கார்ப்ரேட் சலுகைகள், பரிந்துரை சலுகைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

டொயோட்டா: எண்ட்ரி தொடங்கி மிட்-சைஸ் வரை

டொயோட்டாவின் எண்ட்ரி தொடங்கி மிட்-சைஸ் செக்மேண்ட் வரையில் கருத்தில் கொண்டால், க்ளான்சா மற்றும் டெய்சர் ஆகியவை கவனிக்கத்தக்க சலுகைகளை பெற்றுள்ளன. க்ளான்சா E மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்டானது 22 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகளையும் சிஎன்ஜி வேரியண்டானது எக்சேஞ்ச் அடங்கிய 55 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களையும் பெறுகிறது. எண்ட்ரி லெவல் E வேரியண்டைத் தவிர, மற்ற அனைத்து மேனுவல் வேரியண்ட்களும் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான சலுகைகளையும் லாயல்டி சலுகைகளையும் பெறுகின்றன. அதே நேரம் ஆட்டோமேடிக் ட்ரான்மிஷன் வேரியண்ட்கள் ரூ. 98,300 தள்ளுபடி மற்றும் லாயல்டி சலுகைகளையும் பெறுகின்றன. டெய்சர் கார் வேரியண்ட் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.49,200 வரையிலான கூட்டு சலுகைகளை பெறுகிறது.

டொயோட்டா: ஹைப்ரிட் கார்கள்

ஹைரைடரின் ஹைப்ரிட் கார் மாடல்களும் நல்ல பலன்களை பெற்றுள்ளன. அதன்படி, ஹைப்ரிட் வகை ரூ.96,100 வரையிலான நன்மைகளையும், அதே நேரத்தில் ஹைப்ரிட் சிஎன்ஜி எடிஷன் ரூ.74,000 வரையிலான பலன்களையும் கொண்டுள்ளது. ஹைரைடர் காரானது தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்டின் அடிப்படையில் வெவ்வேறு நன்மைகளைக் பெறுகிறது. G மற்றும் V நியோடிரைவ் வேரியண்ட்கள் ரூ. 62,000 மதிப்புள்ள ஒருங்கிணைந்த நன்மைகளையும் லாயல்டியையும் கொண்டுள்ளன. S நியோடிரைவ் எடிஷன்கள் ரூ. 62,660 வரையிலான பலனை அளிக்கிறது. அடிப்படை E நியோடிரைவ் டிரிம் லாயல்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 55,000 நன்மைகளைக் கொண்டுள்ளது.

டொயோட்டா கார்களுக்கான சலுகைகள்:

கார் மாடல்

வேரியண்ட் / இன்ஜின் வகை

முக்கிய சலுகைகள் 

மொத்த நன்மைகள் (ரூ.)

எல்சி 300 (2025)

பெட்ரோல் 4×4

எக்சேஞ்ச் 50,000 + கார்ப்பரேட் 50,000 + TFS/வாரண்டி 12,67,200

13,67,200

வெல்ஃபயர் (2025)

ஹைப்ரிட் லக்சரி MPV

எக்சேஞ்ச் 50,000 + கார்ப்பரேட் 50,000 + TFS/வாரண்டி 6,55,000

7,55,000

கேம்ரி (2025)

ஹைப்ரிட்

எக்சேஞ்ச் 50,000 + கார்ப்பரேட் 50,000 + TFS/வாரண்டி 2,04,500

3,04,500

ஹிலக்ஸ் (2025)

அனைத்து மாடல்களும்

ரொக்கம் 80,000 + எக்சேஞ்ச் 30,000

1,10,000

க்ளான்ஸா மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (E தவிர)

ரொக்கம் 40,000 + எக்சேஞ்ச் 40,000 + கார்ப் 6,500 + வாரண்டி 13,800

1,00,300 + லாயல்டி

ஹைப்ரிட் (ஹைரைடர்)

ரொக்கம் 26,000 + எக்சேஞ்ச் 40,000 + லாயல்டி 50,000 + கார்ப் 6,500 + வாரண்டி 23,600

96,100 + லாயல்டி

Glanza அனைத்து AT மாடல்களும்

ரொக்கம் 38,000 + எக்சேஞ்ச் 40,000 + கார்ப் 6,500 + வாரண்டி 13,800

98,300 + லாயல்டி

ஹைப்ரிட் CNG (ஹைரைடர்)

ரொக்கம் 45,000 + எக்சேஞ்ச் 25,000 + லாயல்டி 50,000 + கார்ப் 4,000

74,000 + விசுவாசம்

ஹைரைடர் (2025)

எஸ் நியோடிரைவ்

ரொக்கம் 15,000 +எக்சேஞ்ச் 20,500 + லாயல்டி 50,000 + கார்ப் 8,000 + வாரண்டி 19,160

62,660 + லாயல்டி

ஹைரைடர் (2025)

ஜி & வி நியோடிரைவ்

எக்சேஞ்ச் 35,000 + லாயல்டி 50,000 + கார்ப் 8,000 + வாரண்டி 19,160

62,000 + லாயல்டி

ஹைரைடர் (2025)

இ நியோடிரைவ்

ரொக்கம் 40,000 + எக்சேஞ்ச் 15,000

55,000 + லாயல்டி

க்ளான்ஸா (2025)

CNG மாடல்

ரொக்கம் 35,000 + எக்சேஞ்ச் 20,000

55,000

டெய்சர் (2025)

டர்போ அல்லாதது

ரொக்கம் 12,500 + எக்சேஞ்ச் 20,000 + லாயல்டி 50,000 + கார்ப் 3,000 + வாரண்டி 13,700

49,200 + லாயல்டி

டெய்சர் (2025)

டர்போ எம்டி

ரொக்கம் 12,500 + எக்சேஞ்ச் 10,000 + லாயல்டி 50,000 + கார்ப் 3,000 + வாரண்டி 17,900

43,400 + லாயல்டி

ரூமியன் (2025)

அனைத்து மாடல்களும் (CNG உட்பட)

ரொக்கம் 10,000 + எக்சேஞ்ச் 20,000

30,000 ரூபாய்

க்ளான்ஸா (2025)

E MT மட்டும்

ரொக்கம் 22,000

22,000

இன்னோவா (2025)

கிராமப்புற திட்டம்

ரொக்கம் 15,000

15,000

டொயோட்டா: எம்பிவி, ப்ரீமியம் லைன் -அப்

  • ரூமியனின் அனைத்து வேரியண்ட்கள் மீதும் ரூ.30000 வரை பலன்கள்
  • இன்னோவா கிராமப்புற திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்திற்கான பலன்களை கொண்டுள்ளது

லக்சரி பிரிவில் முதன்மை கார் மாடல்களுக்கு டொயோட்டா நிறுவனம் அதிகபட்ச சலுகைகளை அள்ளி வீசியுள்ளது. அதில், 

  • கேம்ரி ஹைப்ரிட் மாடல் - ரூ.3,04,500 வரை சலுகை
  • வெல்ஃபயர் மாடல் - ரூ.7,55,000 வரை சலுகை
  • லேண்ட் க்ரூசர் 300 மாடல் - ரூ.13,67,00 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Car loan Information:

Calculate Car Loan EMI