உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. சனாதானத்தில் கூறியுள்ள கட்டணமின்றி வழங்க கூடிய உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேங்கடத்தை கொலை செய்தது? இது 100% திட்டமிட்ட கொலை என பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாத ஸ்ரீ சாய் பீடம் அமைந்துள்ளது.
இங்கு இன்று ஸ்ரீ திரு விக்ரம மகாதேவ ஞான வல்லப தத்தாத்ரேயர் மகா யாகம் ஆலய நிறுவனர் ஸ்ரீ லலிதா வல்லபாந்தமை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது எச்.ராஜா பேசுகையில், ”சனாதானம் என்பது என்னவென்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது, ஹிந்து வாழ்வியலே சனாதனம் என்று கூறியுள்ளது. சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதன எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது” என்றார்
பின் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில், சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி வைத்துள்ளதால் மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால் சனாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார். ஆகையால் தான் சனாதனத்தை கொசு டெங்கு போன்றவை அழிப்பதுபோல் அழிக்கவேண்டும் பேசிக்கொண்டு வருகிறார் .
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திருவேங்கடத்தை கொலை செய்தது, ஏன்? ஜெயிலிலிருந்து வெளியே வந்த நபரிடம் எப்படி ஆயுதம் வந்தது, ஜெயிலில் இருந்து எப்படி அதிகாலை 5 மணிக்கு குற்றவாளி கொண்டுவரப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு பல சந்தேகம் எழுது வருவதால் இது திட்டமிட்டபடி 100% கொலைதான், இதில் ஆளும் கட்சியினர் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் வருவதால் ஆரம்பக்கட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பட்டியல் மக்களின் பாதுகாவலர்கள் இல்லை
நிறைய விஷயங்களை மறைக்க பார்க்கிறார்கள், ஆளுகின்ற கூட்டத்தில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் இதை செய்தார்கள் என கூறுகிறார்கள். முதல் நாளிலிருந்து பாஜக கேட்பது சிபிஐ விசாரணை வேண்டும். அதுதான் உண்மையை வெளிக் கொண்டு வரும்.
திருமாவளவன் பட்டியல் மக்களின் பாதுகாவலர் இல்லை என பேசினார்.