Mahindra Thar Roxx: மஹிந்திரா தார் ராக்ஸ் கார் மாடல், வரும் 15ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

Continues below advertisement

மஹிந்திரா தார் ராக்ஸ்:

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான தார் மாடல் காரின், 5 டோர் எடிஷனாக ராக்ஸ் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், வரும் 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று இந்திய சந்தையில் அறிமுகபப்டுத்தப்பட உள்ளது. அதைமுன்னிட்டு, அந்த காரின் விலை எவ்வளவாக இருக்கும் என்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.  இந்நிலையில், இந்த புதிய SUV பிரீமியமாக இருக்கும் அதே வேளையில், அதன் விலை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தார் ராக்ஸ் விலை:

3 டோர் தார் மாடலின் தொடக்க விலை ரூ. 11 லட்சமாகவும், அதன் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.18 லட்சமாகவும் இருந்து வருகிறது. அதேநேரம்,  Roxx ஆனது கூடுதல் கதவுகள் கொண்ட தார் கார் அல்ல. காரணம்,  Roxx மாடல் ஆனது மாற்றியமைக்கப்பட்ட Scorpio N பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. தார் ராக்ஸ் காரின் எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு ரூ.18 லட்சத்தில் தொடங்கி, ரூ.25 லட்சத்தில் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அம்சங்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட விலை சரியானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. 

Continues below advertisement

இதையும் படியுங்கள்: RBI Gold Bond Scheme: அச்சச்சோ..! மூடப்படுகிறது அரசின் தங்கப் பத்திரம் திட்டம்? காரணம் என்ன? யாருக்கு நஷ்டம்..!

தார் ராக்ஸ் அம்சங்கள்:

தார் ராக்ஸ் 10.25-இன்ச் தொடுதிரை மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஆனால் அவை XUV700 மாடலில் இருப்பதை போன்று ராக்ஸில் இணைக்கப்படவில்லை. உட்புற வடிவமைப்பு பொருத்தமான தொழில்நுட்பத்துடன் இருக்கும் மற்றும் 3 டோர் தார் எடிஷனுடன் ஒப்பிடும் போது டேஷ்போர்டின் வடிவமைப்பும் வித்தியாசமாக இருக்கும். காற்றோட்டமான இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ADAS லெவல் 2, 360 டிகிரி கேமரா, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படலாம்.

Roxx இன் இன்ஜின் விருப்பங்கள் தார் 3 டோர் எடிஷனை சார்ந்ததாகவே இருக்கும், ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் 4x4 எதிர்பார்க்கப்படும் போது சில சஸ்பென்ஷன் ட்யூனிங்கை எதிர்பார்க்கலாம். எனவே, ரூ.18-25 லட்சம் விலை வரம்பில், அதாவது தார் 3-டோர் அதன் தெளிவான பிரீமியம் பொசிஷனிங்குடன் விலையின் அடிப்படையில் முடிவடையும் இடத்திலிருந்து, தார் ராக்ஸ் விலை தொடங்குகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி Roxx இன் விலை மற்றும் சரியான வேரியண்ட் லைன் - அப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI