இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் வர்த்தத்தை தொடங்கியுள்ளது.
காலை 10:00 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 அல்லது 1.56% புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 451.75 அல்லது 1.52% புள்ளிகள் சரிந்து 24,341.90 ஆக வர்த்தகமாகி வருகிறது.
காலை 11.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,432.11 அல்லது 2.38% புள்ளிகள் சரிந்து 78,688.98 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 708.85 அல்லது 2.87% புள்ளிகள் சரிந்து 24,008.85 ஆக வர்த்தகமாகி வருகிறது.
ரூ.15 லட்சம் கோடி இழப்பு:
வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் 5கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.BSE ரூ.457 லட்சம் கோடியில் இருந்து ரூ.447 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
வர்த்தக நேர தொடக்கத்தில், சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வர்த்தகமான பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை ஏற்படும் அச்சம், அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பட்ஜெட் அறிவிப்பும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.
பங்குச்சந்தையில் உள்ள எல்லா துறைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 9:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,519.64 அல்லது 1.88% புள்ளிகள் சரிந்து 79,462.31 ஆகவும் நிஃப்டி 464.60 அல்லது 1.88 புள்ளிகள் சரிந்து 24,253.10 ஆகவும் வர்த்தகத்தை தொடங்கியது. கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் லாங்க் ட்ரம் கேபிடள் கேயின் வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அப்போது நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வரலாற்று பதிவு செய்தது. இருப்பினும் பங்குச்சந்தை இந்த மாதம் முழுவதும் சரிவுடன் வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாக முதலீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
ஹெச்.யு.எல்., நெஸ்லே, டாடா கான்ஸ் ப்ராட், சன் ஃபார்மா, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
டாடா மோட்டார்ஸ், ஓன்.என்.ஜி.சி., இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ., டெக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, பவர்கிரிட் கார்ப், எம் & எம், ஹெச்.சி.எல். டெக்.விப்ரோ, பஜாஜ் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், டி.சி.எஸ்.,க்ரேசியம், ஆக்சிஸ் வங்கி, பி.பி.சி.எல்., அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெ.டி.எஃப்.சி வங்கி, என்.டி.பி.சி., டிவிஸ் லேப்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப்,ம் சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, கோடாக் மஹிந்திரா வங்கி,டைட்டன் கம்பெனி, ஐ.டி.சி. அப்பல்லோ மருத்துவமை, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.