Mahindra SUV List: மஹிந்திரா நிறுவனம் சார்பில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 8 எஸ்யுவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


மஹிந்திரா எஸ்யுவி கார்கள்:


கார் பிரியர்களின் முக்கிய தேர்வாக எஸ்யுவிக்கள் உள்ளன. ஆஃப்-ரோடிலும் அநாயசமாக பயணிக்கும் இந்த வாகனங்களில் கட்டமைப்பு பயனாளர்களை தொடர்ந்து ஈர்க்கிறது.   அந்த தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் இந்திய சந்தையில் பூர்த்தி செய்வதில் மஹிந்திரா நிறுவனம் முக்கிய பங்கை வகிக்கிறது. அந்த வகையில் பல்வேறு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டு, மஹிந்திரா நிறுவனம் சார்பில் 8 எஸ்யுவிக்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் பேஸ் மாடல் தொடங்கி, டாப் எண்ட் வரையிலான எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Mahindra Scorpio N:


மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் கார் மாடல், அந்த நிறுவனத்தின் தொடக்க மாடல் எஸ்யுவி ஆகும். 34 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதிகபட்சமாக 24 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரில், 6 முதல் 7 பேரில் பயணிக்கலாம்.


XUV 700:


மஹிந்திரா நிறுவனத்தின் XUV 700 கார் மாடல், அந்த நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி ஆகும். மொத்தமாக 37 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை 13 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆகவும், அதிகபட்சமாக 26 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரானது லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


THAR:


மஹிந்திரா நிறுவனத்தின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருப்பது தார் கார் மாடல். ஆஃப் ரோட் பயணங்களுக்கான ஆகச்சிறந்த தேர்வாக உள்ளது. 4 பேர் அமரும் வகையிலான வசதி கொண்ட இந்த வாகனம், 19 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்ச விலை 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 15.2கிமீ மைலேஜ் வழங்குகிறது.


XUV 300:


மஹிந்திரா எஸ்யுவிக்களில் குறைந்த தொடக்க விலையை கொண்ட கார் மாடலாக XUV 300 உள்ளது. W2, W4, W6, W8 மற்றும் W8(O) என 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த வாகனமானது 5 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை 7 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாகவும்,  அதிகபட்ச விலை 14 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 20.1 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


SCORPIO CLASSIC:


7 முதல் 9 பேர் வரை அமரும் வகையில் விசலாமான இட வசதி கொண்ட, SCORPIO CLASSIC கார் மாடல் இந்திய சந்தையில் S மற்றும் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.  2184 cc டீசல் இன்ஜினை கொண்டுள்ள இந்த வாகனத்தின் தொடக்க விலை, ரூ.13.59 லட்சமாகவும், அதிகபட்ச விலை 17.35 லட்சமாகவும் உள்ளது.


BOLERO NEO:


பொலீரோ நியோ காரில் உள்ல 1493 cc இன்ஜின் ஆனது 98.56 bhp மற்றும் 260 Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 7 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்டுள்ள இந்த வாகனம், N4, N8, N10 மற்றும் N10(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 9.90 லட்சமாகவும், அதிகபட்ச விலை 12.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


BOLERO:


பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் கட்டாயம் இடம்பெற்று விடும், பொலிரோ கார் மாடல் இந்தியாவில் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்ச விலை 10 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இதில் உள 1493 ccசிசி இன்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன், லிட்டருக்கு 16கிமீ மைலேஜ் வழங்குகிறது.


MARAZZO:


மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய போர்ட்ஃபோலியோவில் கடைசி எஸ்யுவி ஆக இருப்பது மாரசோ கார் மாடல். 7 முதல் 8 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்டுள்ள  இந்த வாகனமானது, M2, M4+ மற்றும் M6+ என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 14.39 லட்சமாகவும், அதிகபட்ச விலை 16.80 லட்சமாகவும் உள்ளது. 


 


Car loan Information:

Calculate Car Loan EMI