பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்டப் பொறியாளர், பயிற்சிப் பொறியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று (23-ம் தேதி) கடைசி தேதி என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்
பணி விவரம்
ப்ராஜெக்ட் பொறியாளர்
பயிற்சிப் பொறியாளர்
பணி இடம்:
பெல் நிறுவனத்தின் மத்திய, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்.பி.ஐ. கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்க ரூ. 177/- செலுத்த வேண்டும்.
ப்ராஜக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிகக் ரூ.472 செலுத்த வேண்டும். 18% ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும்.
மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ப்ராஜெக்ட் பொறியாளர்
1- ஆண்டு - ரூ. 40,000/-
2- ம் ஆண்டு- ரூ.45,000/-
3- ம் ஆண்டு - ரூ.50,000/-
4-ம் ஆண்டு - ரூ.55,000/-
பயிற்சிப் பொறியாளர்
1- ஆண்டு - ரூ. 30,000/-
2- ம் ஆண்டு- ரூ.35,000/-
3- ம் ஆண்டு - ரூ.40,000/-
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
MANAGER (HR/NS-S&CS),
Bharat Electronics Limited, Jalahalli Post,
Bengaluru - 560 013,
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.03.2024
இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Eng%20webadvt%2006032024%20NS1-6-3-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.