Mahindra XEV 9e BE 6: மஹிந்திரா நிறுவனத்தின் 79KWh பேட்டரி பேக்கை கொண்ட, XEV 9e மற்றும் BE 6 கார் மாடல்களின், பேக் 2 வேரியண்ட்களின் தொடக்க விலை ரூ.21.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் XEV 9e, BE 6 மின்சார கார்கள்:
மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9e ம்ற்றும் BE 6 மின்சார கார் மாடல்கள், கடந்த மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற இந்த கார் மாடல்கள் தற்போது, பேட்டரி கான்ஃபிகரேஷனில் மிக முக்கியமான அப்கிரேடை பெற்றுள்ளது. அதன்படி, லாங் ரேஞ்ச் வேரியண்டான பேக் த்ரீ-யில் மட்டும் வழங்கப்பட்டு வந்த 79KWh பேட்டரி பேக் ஆப்ஷனானது தற்போது, பேக் 2 வேரியண்ட்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எடிஷன்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், விநியோகம் ஜுலை மாத இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் ரூ.4 லட்சம் மலிவான விலையிலேயே லாங் ரேஞ்ச் வேரியண்டை தற்போது பயனாளர்கள் பெற முடியும்.
XEV 9e, BE 6 - 79KWh பேட்டரி ஆப்ஷன் விலை விவரங்கள்
முன்னதாக XEV 9e ம்ற்றும் BE 6 மின்சார கார் மாடல்கள் பேக் 2 வேரியண்டில் 59KWh பேட்டரி பேக் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை முறையே ரூ.24.90 லட்சம் மற்றும் ரூ.21.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது லாங் ரேஞ்ச் எடிஷனாக 79KWh பேட்டரி பேக்கும் இணைக்கப்பட்டு, அவற்றின் விலை முறையே ரூ.26.5 லட்சம் மற்றும் ரூ.23.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
15 வேரியண்ட்களில் கிடைக்கும் XEV 9e கார் மாடலின் விலை, சென்னையில் ரூ.23.20 லட்சத்தில் தொடங்கி ரூ.33.32 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. 18 வேரியண்ட்களில் கிடைக்கும் BE 6 கார் மாடலின் விலை ரூ.20.06 லட்சத்தில் தொடங்கி ரூ.29.42 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது.
| மாடல் | பேட்டரி பேக் | தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்) |
| BE 6 பேக் 2 | 59KWh | ரூ.21.90 லட்சம் |
| BE 6 பேக் 2 | 79KWh | ரூ.23.50 லட்சம் |
| XEV 9e பேக் 2 | 59KWh | ரூ.24.90 லட்சம் |
| XEV 9e பேக் 2 | 79KWh | ரூ.26.50 லட்சம் |
XEV 9e, BE 6 - கூடுதல் ரேஞ்ச்:
புதிய மற்றும் பெரிய 79KWh பேட்டரி பேக் மூலம், மஹிந்திராவின் இரண்டு மின்சார கார்களின் சிட்டி ரேஞ்ச் ஆனது 500 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. அதேநேரம், பழைய 59KWh பேட்டரி பேக் ஆப்ஷனில் 400 கிலோ மீட்டர் ரேஞ்சை XEV 9e ம்ற்றும் BE 6 மின்சார கார்கள் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். முன்பதிவு செய்து விநியோகத்திற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களும், தங்களது கார்களை லாங் ரேஞ்ச் வேரியண்டிற்கு மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதல் ரேஞ்சை எதிர்பார்க்கும் பயனாளர்கள் இனி பேக் த்ரீ வேரியண்டை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய லாங் ரேஞ்ச் வேரியண்டின் விலை ரூ.30.50 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய வேரியண்ட்களானது XEV 9e மற்றும் BE 6 கார் மாடல்களின் டாப் 2 வேரியண்ட்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
சார்ஜிங் விவரங்கள்:
59KWh பேட்டரி பேக்கானது 170KW திறன் கொண்ட மோட்டரிடமிருந்தும், 79KWh பேட்டரி பேக்கானது 210KW திறன் கொண்ட மோட்டாரிடமிருந்தும் ஆற்றலை பெறுகிறது. இரண்டு பேட்டரிகளுமே ரேபிட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. சிறிய பேட்டரியானது 140 KW டிசி சார்ஜரையும், பெரிய பேட்டரியானது 175 KW டிசி சார்ஜரையும் கொண்டு, வெறும் 20 நிமிடங்களிலேயே 20 முதல் 80 சதவிகித சார்ஜிங் நிலையை எட்ட முடியும். பல்வேறு ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ள இந்த கார்கள், கூடுதலாக பூஸ்ட் மோடையும் பெற்றுள்ளன.
XEV 9e, BE 6 - தொழில்நுட்ப அம்சங்கள்:
இரண்டு கார்களின் பேக் 2 வேரியண்ட்களுமே அதிகப்படியான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகளை பெற்றுள்ளன. அதன்படி, லெவல் 2 ADAS, பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப், டால்பி அட்மாஸ் உடன் கூடிய 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டோன் ஆகியவற்றை கொண்டுள்ளது. BE 6 காரின் பேக் 2வானது பேக் 3ல் உள்ள பிரீமியம் சேஜ் லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ஐவொரி ரூஃப் லைனரை கடன் வாங்கியுள்ளது. அதேநேரம், XEV 9e காரானது மாடர்ன் டேஷ்போர்ட் லே-அவுட்டுடன் கூடிய 3 ஸ்க்ரீன்களை பெற்றுள்ளது. இந்திய மின்சார வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள XEV 9e மற்றும் BE 6 எஸ்யுவிக்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முன்பதிவை பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI