Top 5 Costly Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 6 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்:
இந்தியாவில் சொந்த கார் வாங்க வேண்டும் என விரும்பும் நடுத்தர மக்களுக்கு, வெறும் 6 லட்சம் பட்ஜெட்டிலேயே சில ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதேநேரம் ஆற்றல் நிறைந்த பைக்குகளை வாங்க வேண்டும் என விரும்பும் மக்களுக்கு, 6 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் மோட்டார்சைக்கிள் கூட கிடைக்கின்றன. அந்த வகையில் 6 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டிலான முதன்மையான வாகனங்களை கவாசகி நிறுவனம் வழங்கி வருகிறது. ஒவ்வொன்றும் செயல்திறனில் சிறந்து விளங்கி சற்றே வித்தியாசப்படுகிறது. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. கவாசகி வல்கன் S
கவாசகி வல்கன் S மோட்டர்சைக்கிளின் விலை 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 229 கிலோ எடைகொண்ட இந்த மிடில்வெயிட் க்ரூசரானது 649cc பாரெல்லல் ட்வின், லிக்விட் கூல்ட் இன்ஜினை பெற்றுள்ளது. அதன் மூலம், 61hp மற்றும் 62.4Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இது லிட்டருக்கு சுமார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. நீண்ட தூர பயணங்களுக்கான ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது.
2. கவாசகி வெர்சிஸ் 650
கவாசகி வெர்சிஸ் மோட்டர் சைக்கிளின் விலை 7 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதிலும் அதே 649cc பாரெல்லல் ட்வின் இன்ஜின் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால், 67hp மற்றும் 61Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. ஆனால், 218கிலோ என்ற அதிகப்படியான எடையானது,வாகனத்தின் செயல்திறனை சற்றே குறைக்கிறது. வல்கன் மாடலை காட்டிலும் இதில் 4.3 இன்ச் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் கூடிய TFT டிஸ்பிளே மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை வெர்சிஸ் பெற்றுள்ளது. இது லிட்டருக்கு சுமார் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
3. கவாசகி நிஞ்சா 650
நிஞ்சா 650 என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பக்கூடிய பைக் மாடலாகும். இதன் விலை 7 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. மிடில் வெயிட் ஸ்போர்ட்ஸ்பைக்கை விரும்புவோருக்கு, 196 கிலோ எடையிலான நிஞ்சா 650 ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 649cc பாரெல்லல் ட்வின் இன்ஜின் மூலம், 68hp மற்றும் 64Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. வலுவான ஆக்சிலரேஷன் மற்றும் செயல்திறனை கொண்டுள்ள இந்த வாகனமானது, லிட்டருக்கு சுமார் 21 முதல் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
4. கவாசகி Z650RS
கவாசகியின் Z650RS மோட்டர்சைக்கிளின் தொடக்க விலை 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. நிஞ்சா 650-யில் உள்ள அதே பாரெல்லல் ட்வின் இன்ஜினை பயன்படுத்தினாலும், சற்றே லேசாக 192 கிலோ எடையையே கொண்டுள்ளது. மாடர்ன் கிளாசிக் ஸ்டைலிங் மூலம் கவனத்தை ஈரக்க்கூடிய வாகனமாக திகழ்கிறது. அதேநேரம், விண்டேஜ் டச்சை பெறும் வகையில் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் களஸ்டர் நிலையானதாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மெயின் ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் போன்ற அடிப்படையான அம்சங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இது லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
5. கவாசகி Z650
கவாசகியின் Z650 மைக் மாடலின் விலை 6 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. நிஞ்சா 650 மாடலின் சகோதரனாக அறியப்படும் இந்த மோட்டார்சைக்கிளானது, சிறந்த பவர் டீ வெயிட் ரேஷியோவை கொண்டுள்ளது. வேகமானது, சுறுசுறுப்பானது மற்றும் சிரந்த பயண அனுபவத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. கூடுதலாக இந்த பட்டியலில் உள்ள மலிவான பைக் இதுவே ஆகும். லிட்டருக்கு சுமார் 21 முதல் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI