Bikes With Powerful Engines: ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சக்தி வாய்ந்த இன்ஜின்களை கொண்ட பைக்குகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சுசுகி ஹயபுசா
Suzuki Hayabusa அறிமுகம் தேவையில்லாத சிறப்புமிக்க வாகனமாகௌம். அதன் பெயரில் பல வேக சாதனைகள் உள்ளன. அவற்றில் சில இன்னும் உடைக்கப்படாமல் உள்ளன. ஹயபுசா என்பது ஜப்பானிய மாஸ்டர் பொறியியல் மற்றும் வாகனத் திறன்களின் வெளிப்பாடாகும். இது 190 bhp மற்றும் 142 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1340cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. லிட்டருக்கு 15 முதல் 17.8 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஹயபுசா ஸ்டாண்டர்டு 16,91,968 ரூபாயில் தொடங்குகிறது.
டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2
டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2 இரண்டு சக்கரங்களில் இயங்கும் மிருகத்தனமான வாகனமாகும். இது தனது தோற்றத்திற்கு ஏற்ப அச்சுறுத்தும் வகையில் சவாரி செய்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 150.59 bhp மற்றும் 101.4 Nm உற்பத்தி செய்யும் 955cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 ஸ்டாண்டர்ட் விலை ரூ.18,50,200 இல் தொடங்குகிறது.
பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்
டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2க்கு நேரடிப் போட்டியாக இருப்பது BMW S 1000 R. மேற்குறிப்பிட்ட அந்த சிவப்பு மிருகத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இது 162.26 bhp மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 999cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த S 1000 R பைக் 199 கிலோ எடையும், 16.5 எரிபொருள் டேங்க் கொள்ளளவும் கொண்டது. இது லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜ் வழங்குகிறது. S 1000 R ஸ்டாண்டர்டு ரூ.19,00,000 முதல் தொடங்குகிறது.
ட்ரையம்ப் ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ்
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் ஹோலி கிரெயில் - ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ் நிறுவனத்தின் பட்டியலில் மிகவும் உற்சாகமான மாடலாக உள்ளது. இது 177.5 bhp மற்றும் 125 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1160cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ் 198 கிலோ எடையும், 15.5 கேலன் எரிபொருள் டேங்க் கொள்ளளவும் கொண்டது. இது லிட்டருக்கு 17.9 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ் ஸ்டாண்டர்டு ரூ.18,25,000 முதல் தொடங்குகிறது.
கவாஸாகி நிஞ்ஜா ZX-10R
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10ஆர், 200.21 பிஎச்பி மற்றும் 114.9 என்எம் ஆற்றலை வழங்கும் 998சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் 207 கிலோ எடையும், 17 கேலன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவும் கொண்டது. இது லிட்டருக்கு 12 முதல் 16.2 கிமீ மைலேஜ் வழங்குகிறது. நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் ஸ்டாண்டர்டு ரூ.16,79,000 இல் தொடங்குகிறது
Car loan Information:
Calculate Car Loan EMI