Popular Electric Cars: சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான டாப் 7 மின்சார கார்கள், தொடர்பான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


மின்சார கார்கள்:


இன்ஜின் மூலம் இயங்கும் கார்கள் கோலோச்சி வந்த நிலையில், மின்சார கார்கள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. எரிபொருள் விலை உள்ளிட்ட காரணங்களால், வழக்கமான காரை காட்டிலும் மின்சார கார்களின் பயன்பாடு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே வழக்கமான எண்ட்ரி லெவல் கார்கள் மட்டுமின்றி, பல முன்னணி நிறுவனங்கள் சொகுசு மின்சார கார்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான டாப் 7 மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


டெஸ்லா ஒய் (Tesla Model Y):


டெஸ்லா  நிறுவனத்தின் மாடல் ஒய் கார் என்பது அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகளவில் மிகவும் பிரபலமான மின்சார எஸ்யூவிகளில் ஒன்றாகும். இதில் இடம்பெறும் பேட்டரி பேக்குகள் மற்றும் மோட்டார்கள்  கூடுதல் விருப்பங்களுடன் கிடைக்கின்றன. ஜனவரி 2024 இல் டெஸ்லா மாடல் Y காரின்,  74,430 யூனிட்களை விற்பனையாகியுள்ளன. அமெரிக்காவில் இதன் விலை இந்திய மதிப்பில் 36 லட்சத்தில் தொடங்கி 45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tesla Model 3:


டெஸ்லா மாடல் 3 உலகின் இரண்டாவது பிரபலமான மின்சார வாகனமாகும். இது சிறந்த மதிப்பு மற்றும் நிகரற்ற சார்ஜிங் நெட்வொர்க்கை வழங்குகிறது. இது டெஸ்லா தயாரிக்கும் மலிவான கார் ஆகும். கடந்த ஜனவரி மாதத்தில் டெஸ்லா மாடல் 3 இன் 35,109 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அமெரிக்காவில் இதன் விலை இந்திய மதிப்பில் 33 லட்சத்தில் தொடங்கி 45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Aito M7:


Aito M7 என்பது சீன சந்தையில் 7 இருக்கைகள் கொண்ட SUV ஆகும்.  இது நடைமுறை எதிர்பார்புகளை பூர்த்தி செய்வதன் காரணமாக இது பிரபலமாக உள்ளது. இது ஒரு சில வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.  ஜனவரி 2024 இல் Aito M7 இன் 29,997 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.


BYD Seagull:


BYD சீகல் மிகவும் பிரபலமான சிட்டி கார் ஆகும். இது அதன் சிறிய விகிதாச்சாரங்கள் மற்றும் அது வழங்கும் நடைமுறைத்தன்மை காரணமாக பிரபலமானது. சீகல் சீன சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் அந்த மாடலின் 28,050 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த காரின் விலை, 10 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


BYD டால்பின்:


BYD டால்பின் மற்றொரு சிறிய சிட்டி கார் ஆகும். இதுவும் சீன சந்தையில் மிகவும் பிரபலமான மற்றொரு மின்சார கார் மாடலாக உள்ளது. இது அதன் அளவிற்கு மரியாதைக்குரிய வரம்பைக் கொண்டுள்ளது. BYD ஜனவரி 2024 இல் 23,213 டால்பின் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. சீனாவில் இந்த காரின் தொடக்க விலை இந்திய மதிப்பில் 11 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். 


BYD Atto 3:


BYD Atto 3 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மின்சார வாகனமாக உள்ளது. அதன் கச்சிதமான SUV விகிதாச்சாரங்கள் ஐரோப்பிய சந்தைகளில் கூட இந்த காரை தினசரி பயன்பாட்டிற்கான் மற்றும் விரும்பத்தக்க வாகனமாக மாற்றியுள்ளது. 2023 இல் அட்டோ 3 சிறந்த விற்பனையான மின்சார வாகனங்களில் ஒன்றாகும். BYD ஆனது 2024 ஜனவரியில் Atto 3 இன் 23,062 யூனிட்களை விற்றது. இதன் விலை 33 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது


சங்கன் லுமின்


சங்கன் லுமின் ஒரு அழகான சிறிய சிட்டி மாடல் கார் ஆகும். அதன் வேடிக்கையான வடிவமைப்பு மற்றும் சிறிய விகிதாச்சாரத்தால் பிரபலமானது. அதன் அளவிற்கு பெரிய இடத்தை வழங்குகிறது. 2024 ஜனவரியில் இந்த மாடலின் 16,041 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய மதிப்பில் இதன் தொடக்க விலை ரூ.4 லட்சம் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI