Best Selling Scooters: இந்திய சந்தையில் அதிகப்படியாக விற்பனையாகும் முதல் 7 ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


7. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட்:


இந்தியாவில் விற்பனையாகும் பெரிய ஸ்கூட்டர்களில் சுசுகி பர்க்மேன் ஒன்றாகும். இந்த மாடல் கடந்த 2023-24 நிதியாண்டில் 1,80,194 பர்க்மேன் ஸ்ட்ரீட் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 2022-23 நிதியாண்டில் விற்கப்பட்ட 1,24,691 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இது, 44.51 சதவிகிதம் அதிகமாகும். இதன் ஆரம்ப விலை ரூ 94,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


6- TVS iQube


டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது FY24 நிதியாண்டில் 1,89,896 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.  இது FY23 இல் விற்கப்பட்ட 96,654 யூனிட்களை விட 96.47% அதிகமாகும். தற்போது இதன் ஆரம்ப விலை ரூ.1.26 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


5- ஓலா எஸ்1:


ஓலா எஸ்1 இந்திய சந்தையில் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. இதன் ஆரம்ப விலை தற்போது ரூ.69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மாடல் கடந்த நிதியாண்டில் 3,29,237 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் விற்கப்பட்ட 1,52,791 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 115.48 சதவிகிதம் அதிகமாகும்.


4- TVS Ntorq


ஸ்போர்ட்டி வடிவமைப்பைத் தேடுபவர்களுக்கு டிவிஎஸ் டார்க் ஸ்கூட்டர் ஒரு விருப்பமான தேர்வாகும். இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி, கடந்த நிதியாண்டில் டார்க் ஸ்கூட்டரின் 3,31,865 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.  இது முந்தைய நிதியாண்டில் விற்கப்பட்ட 2,90,539 யூனிட்களை விட 14.22% அதிகம். இதன் தொடக்க 84,636 ரூபாயாகும்.


3- சுசுகி அக்செஸ்:


சுசுகி அக்செஸ் என்பது ஜப்பானிய வாகன உற்பத்தியாளரால் வெகுஜன சந்தைக்காக வடிவமைக்கப்பட்ட மாடல் ஆகும். தற்போது ரூ.79,899 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சுசுகி நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டரின் 6,34,563 யூனிட்கள் கடந்த நிதியாண்டில் விற்பனையானது. இது முந்தைய நிதியாண்டில் விற்கப்பட்ட 4,98,844 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 27.21 சதவிகிதம் அதிகமாகும்.


2- டிவிஎஸ் ஜூபிடர்


இந்திய சந்தையில் ஜூபிடர் இரண்டாவது பிரபலமான ஸ்கூட்டர் ஆகும். கடந்த நிதியாண்டில் இந்த மாடலின் 8,44,863 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனையானது. முந்தைய 2022-23 நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட 7,29,546 யூனிட்களுடன் ஒப்பிடும்போது இது 15.81 சதவிகிதம் வளர்ச்சியைக் காட்டுகிறது. இது தற்போது ரூ.73,340 (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


1. ஹோண்டா ஆக்டிவா:


ஹோண்டா ஆக்டிவா சில காலமாக இந்திய ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ந்து முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது.  2023-24  நிதியாண்டில் மட்டும் 22,54,537 ஆக்டிவா யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையான ஸ்கூட்டராகவும் உள்ளது.  இது 2023 நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட 21,49,537 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 4.88 சதவீத வளர்ச்சியாகும். இதன் ஆரம்ப விலை ரூ.76,234


Car loan Information:

Calculate Car Loan EMI