Trichy Power Cut (26.08.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.

Continues below advertisement

திருச்சி மாவட்டத்தில் நாளை  (ஆகஸ்ட் 26) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
 

நாளைய மின் தடை எங்கே?

வேங்கைமண்டலம்

திருப்பைஞ்சீலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு

Continues below advertisement

குணசீலம்

கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம்