Upcoming Season: எதிர்வரும் விழாக்காலத்தில் கார் வாங்க விரும்புவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 5 புதிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
டாடா கர்வ்:
Tata Curvv இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸின் வாகனங்களின் வரிசையில் சமீபத்திய சேர்க்கையாக இருக்கும். இந்த கார் கூபே-எஸ்யூவி கிராஸ்ஓவர் பாடியை கொண்டுள்ளது. இது இந்திய சந்தையில் நெக்ஸான் மற்றும் ஹாரியர் இடையேயான இடைவெளியை குறைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் ஜூலை 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த காரின் விலை அறிவிக்கப்படும்.
மஹிந்திரா தார் 5 டோர்
மஹிந்திரா தார் 5 டோர் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான லைஃப்ஸ்டைல் எஸ்யூவிகளில் ஒன்றின் பெரிய எடிஷனாக இருக்கும். இந்திய வாகன உற்பத்தியாளரின் புதிய வாகனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு அர்மடா என்ற பெயர் சூட்டப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனம் சுவாரஸ்யமான புதுவித வெளித்தோற்றத்துடன், போதுமான இடம், ஆஃப்-ரோடிங் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
சிட்ரோயன் பசால்ட்
இந்திய சந்தையில் Tata Curvv க்கு, சிட்ரோயன் நிறுவனத்தின் பசால்ட் பொருத்தமான போட்டியாக இருக்கும். இந்த கார் C3 Aircross-லிருந்து பவர்டிரெய்ன் கூறுகளை கடன் வாங்கும் ஆனால் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகபப்டுத்தப்படும் என தகவல் வெளியகியுள்ளது.
நிசான் எக்ஸ் டிரெயில்:
நிசான் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் எக்ஸ்-ட்ரெய்னை வெளியிட்டது. இந்த கார் CBU வழியே விற்பனை செய்யப்படும் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இருக்கும். இந்த பவர் யூனிட் 161 பிஎச்பி பவரையும், 300 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஜுலை 23ம் தேதி முன்பதிவு தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 1ம் தேதி சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை 40 முதல் 45 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
BMW 5 சீரிஸ் LWB
பவேரியன் நிறுவனமானது ஜூலை 24, 2024 அன்று 5 சீரிஸ் லாங் வீல்பேஸின் (LWB) புதிய தலைமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்துடன், இந்திய சந்தையில் வலது கை இயக்கத்தை கொண்ட, நாட்டின் முதல் கார் மாடலாக இருக்கும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இருக்கும். இது 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI