Upcoming Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து ஹைப்ரிட் எஸ்யுவி மாடல்களை சந்தைப்படுத்த மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Continues below advertisement

ஹைப்ரிட் எஸ்யுவி கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தை, பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக 2030 நிதியாண்டிற்குள் 26 புதிய கார்களை அறிமுகப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், சீரான இடைவெளியில் மாருதி நிறுவனம் தனது ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஹைப்ரிட் ட்ரெண்டானது இந்திய சந்தையை மறுசீரமைத்து வரும் சூழலில், வளர்ந்து வரும் இந்த பிரிவில் மாருதி மற்றும் ஹுண்டாய் ஆகிய இரு நிறுவனங்களும் ஆழ்ந்த கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்த இரு நிறுவனங்களும் 6 ஹைப்ரிட் எஸ்யுவிகளை இந்திய சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?

Continues below advertisement

1. மாருதி சுசூகி எஸ்குடோ:

உள்நாட்டு சந்தையில் மாருதியின் முற்றிலும் புதிய 5 சீட்டர் மிட்-சைஸ் எஸ்யுவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிரேஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாராவிற்கு இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. எஸ்குடோ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த காரானது, நிறுவனத்தின் நெக்ஸா நிலையங்களில் விற்பனை செய்யப்படும். வடிவமைப்பில் பிரேஸ்ஸாவை காட்டிலும் பெரியதாக, குறிப்பாக மேம்படுத்தப்பட்ட கேபின் வசதி மற்றும் லக்கேஜ் திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரபலமான 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. நடப்பாண்டில் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் விலை, ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இப்போ இல்லையென்றால் எப்போ? குட்டி SUV-யில் செம ஆஃபர்.. கார் லவர்ஸ்க்கு செம டீல்..

2. புதிய தலைமுறை ஹுண்டாய் கிரேட்டா:

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிரேட்டா விரைவில் ஹைப்ரிட் வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. SX3 என்ற கோட் நேமில் குறிப்பிடப்படும் இந்த காரானது, உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் முற்றிலுமாக திருத்தப்பட்டு 2027ம் ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அப்படியே தொடரப்படும் என கூறப்பட்டாலும், வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்ப இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என்பது புதிய மற்றும் பெரிய திருத்தமாகும். அதன்படி, புதிய கட்டமைப்பானது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ட்ரைவ் யூனிட்டின் கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஆதரவாக பெரிய பேட்டரி பேக்கும் இணைக்கப்பட உள்ளது. இது எரிபொருள் செயல்திறனை அதிகரிப்பதோடு, உமிழ்வுகளை குறைத்து ஆக்சிலரேஷன் போது கூடுதல் இழுவை சக்தியை வழங்க உள்ளது. இதன் விலை 15 லட்சம் தொடங்கி 25 லட்சம் ரூபாய் வரை நீளும் என கூறப்படுகிறது.

3. புதிய ஹுண்டாய் C-SUV

ஹுண்டாய் நிறுவனம் தனத் எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்து நோக்கில், புதிய 3 வரிசை இருக்கை மாடலில் பணியாற்றி வருகிறது. இதனை அல்கசார் மற்றும் டக்சன் கார் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரானது நிறுவனம் சார்பில் மகாராஷ்டிராவில் புதியதாக அமைக்கப்படும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.  விரிவான தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருந்தாலும், வலுவான ஹைப்ர்டி செட்-அப் இடம்பெறும் மற்றும் இதன் ஹார்ட்வேர் அமைப்பு கிரேட்டாவுடன் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027ம் ஆண்டு C-SUV விற்பனைக்கு வரும் என கூறப்படும் நிலையில், இதன் தொடக்க விலை ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

4. ஹுண்டாய் பாலிசேட் ஹைப்ரிட்

ஹுண்டாயின் நிறுவனத்தின் ஹைப்ரிட் அம்சத்துடன் மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட, பிளாஃக்‌ஷிப் பாலிசேட் கார் மாடல் 2028ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தபப்டும் என தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவி ரேஞ்சில் முதன்மையானதாக அமரும் என்பதால், பாலிசேட் கார் மாடலின் விலையும் மிகவும் பிரீமியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் ஃபார்மில் 2.5 லிட்டர் டர்போ இன்ஜின் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து பணியாற்ற உள்ளன.

5. மாருதி மைக்ரோ எஸ்யுவி & ஃப்ரான்க்ஸ் ஹைப்ரிட்:

சர்வதேச சந்தைகளில் சுசூகி நிறுவனத்தால் விற்கப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் மாடல் டிசையர், எதிர்காலத்தில் ஃபிரான்க்ஸ் ஹைப்ரிட் வெர்ஷனுக்கு வழிவகுக்கக்கூடும். மாருதி தற்போது ஒரு வலுவான ஹைப்ரிட் அமைப்பை உருவாக்கி வருவதால், ஃபிரான்க்ஸ் போன்ற மாடல்களும், நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி மற்றும் மாருதி சுஸுகியின் ஒரு சிறிய எம்பிவி மாடல்களும் ஹைப்ரிட் அமைப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்படலாம்.

 


Car loan Information:

Calculate Car Loan EMI