விலை கூட இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத லாம்போர்கினியின் ரெவால்டோ மாடல் காருக்கு, 2026ம் ஆண்டு வரையிலான விற்பனை முடிவடைந்துள்ளது.


சொகுசு கார் மோகம்:


இன்றைய தலைமுறையினரிடையே கார்கள் மீதான ஈடுபாடு என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பயணத்திற்காக கார் வாங்குவது என்பதை தாண்டி, சொகுசு கார்களை பயன்படுத்துவதை மிகவும் விரும்புகின்றனர். இதனை உணர்ந்து தான் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும், சொகுசு கார்களை அற்முகப்படுத்தி வருகின்றன. அதில் லாம்போர்கினி நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு மாடல்களில் புதுப்புது கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.


ரெவால்டோ கார் முன்பதிவு:


கடந்த மார்ச் மாதத்தில் தங்களது 60வது ஆண்டு விழாவை கொண்டாடிய லாம்போர்கினி நிறுவனம், தங்களது புதிய ரெவல்டோ மாடல் காரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் காருக்கு சர்வதேச சந்தயில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  புதிய ஹைப்ரிட் V12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ள லம்போர்கினியின் ரெவல்டோ மாடல் காரை, வாங்க வேண்டும் என யாரேனும் விரும்பினால், 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம், சரியாக தான் படிக்கிறீர்கள். காரணம் 2026ம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்படும் லாம்போர்கினியின் அனைத்து ரெவல்டோ மாடல் கார்களுக்குமான முன்பதிவும் முடிவடைந்துள்ளது. இந்த காரின் விலையே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், முன்பதிவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


ரெவால்டோ மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் முந்தைய வெர்ஷனை விட 17 கிலோ வரை எடை குறைவானதாகும். இதில் 6.5-லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜினுடன் 814bhp மற்றும் 725Nm மிகப்பெரிய டார்க்கை உற்பத்தி செய்யும் எய்ட்-ஸ்பீட் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1000bhp திறனை வெளிப்படுத்தும் மூன்று மின்சார மோட்டார்கள் இந்த இன்ஜினுடன் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால்,  Revuelto மாடல் கார் ஆனது 0 முதல் 100kmph எனும் வேகத்தை  வெறும் 2.5 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக இந்த காரை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10 கிலோ மீட்டர் பயணம்:


ரெவால்டோ காரில் 3.8kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 10 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும், V12 இன்ஜின் வெறும் ஆறு நிமிடங்களில் மின் மோட்டார்கள் மூலம் பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது.


இந்தியாவில் ரெவால்டோ:


புதிய ரெவல்டோ மாடல் இந்தியாவிலும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இந்த காரின் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளூர் வரிகள் சேர்க்கும் போது சற்று அதிக விலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்தியாவில் லம்போர்கினி ரெவல்டோ கார் மாடலின் விலை ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால், லாம்போர்கினி நிறுவனத்தின் விலை மதிப்புமிக்க கார் மாடலாக ரெவால்டோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI