நடிகர் தனுஷின் டிவிட்டர் கணக்கில் இருந்து இன்று ப்ளு டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 


 ட்விட்டர் சிஇஓ-வாக எலன் மஸ்க் செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 என மாதக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்தாத பயனாளர்களுக்கு ப்ளூ டிக் முதலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் கால அவகாசம் ஏப்ரல் 20ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.


மேலும் பயனாளர்களுக்கு ப்ளூ டிக், வணிக அக்கவுண்ட்களுக்கு கோல்டன் டிக், அரசு அமைப்புகளுக்கு கிரே டிக் என 3 வகையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு ட்விட்டரில் கட்டணம் செலுத்தாத  அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்து துறையினரின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்  இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பயனாளர்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது. 




இந்நிலையில், நேற்று வரை தனுஷின் டிவிட்டர் கணக்கில் ப்ளு டிக் இருந்த நிலையில் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதற்கான காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.


டிவிட்டர் புளு டிக் என்றால் என்ன?


ட்விட்டரில் உள்ள நீல நிற டிக் சரிபார்க்கப்பட்ட கணக்கைக் குறிக்கிறது. சரிபார்க்கப்பட்ட கணக்கு என்பது ட்விட்டரால் உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு. இந்தக் கணக்குகள் பெரும்பாலும் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிராண்டுகளால் தாங்கள் யார் என்று காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. சரிபார்ப்பு பேட்ஜ் பிரபலங்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நபர்கள் மற்றும் பிராண்டுகளின் கணக்குகள் உண்மையானதா என்பதைச் சொல்லும் ஒரு வழியாக பிற பிரபலமான சமூக ஊடக தளங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


மேலும் படிக்க: 


Leo Update Antony Das: லியோ விஜய்க்கு ஆண்டனி தாஸ் யாரு? சஞ்சய் தத் பிறந்தநாளில் மிரட்டல் அப்டேட் தந்த படக்குழு!


அனுமதி இல்லாமல் ஸ்பா... விபச்சாரம்.... விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர் அதிரடி கைது