கே.டி.எம். நிறுவனத்தின் ட்யூக் பைக் வடிவமைப்பில் பல்வேறு அட்டகாசமான அப்டேட்களுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கே.டி.எம்., நிறுவனம்:
ஆஸ்திரியாவை சேர்ந்த கே.டி.எம்., நிறுவனத்தின் ட்யூக் பைக்கிற்கு இந்திய சந்தையில், நல்ல வரவேற்பு உள்ளது. அதனுடைய ஸ்டைலிஷான அவுட்லுக் வடிவமைப்பின் காரணமாக, டியூக் பைக்கை பயன்படுத்த இந்திய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தான், 2024ம் ஆண்டு வெர்ஷன் 250 டியூக் மற்றும் 125 டியூக் மோட்டார்சைக்கிள்கள் உடன், புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் மோட்டார்சைக்கிளும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கவனம் ஈர்க்கும் வகையிலான புதிய வடிவமைப்புடன் அலாய் வீல்கள், முகப்பு விளக்குகள், எரிபொருள் டேங்க் டிசைன் மற்றும் டெயில் லேம்ப்கள் என பல்வேறு புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சங்கள்:
2024 KTM 250 மற்றும் 125 Duke ஆனது 5.0-inch TFT டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட சுவிட்ச் கியர் மற்றும் இசை கட்டுப்பாடு, உள்வரும் அழைப்பு எச்சரிக்கைகள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற இணைப்பு செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2024 கேடிஎம் 250 மற்றும் 125 டியூக்கின் பிரேக்கிங் கடமைகள் 320மிமீ முன் மற்றும் 240மிமீ பின்புற டிஸ்க்குகள், டூயல்-சேனல், கார்னரிங் மற்றும் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் மூலம் கையாளப்படுகின்றன. அலுமினிய ஸ்விங்கார்ம் கொண்ட ஸ்டீல் ஃப்ரேமில் கட்டப்பட்ட இந்த பைக்குகள் 800மிமீ இருக்கை உயரத்தை வழங்குகின்றன, இதை கேடிஎம் பவர்பார்ட்ஸ் செட் மூலம் 820மிமீ ஆக அதிகரிக்கலாம்.சஸ்பென்ஷனுக்காக, மோட்டார்சைக்கிள்களில் 43மிமீ டபிள்யூபி அபெக்ஸ் முன் ஃபோர்க் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்ட் அட்ஜஸ்ட்டபிலிட்டி மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் மோனோ-ஷாக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இன்ஜின் விவரங்கள்:
250 டியூக்கில் 30hp மற்றும் 24Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 249cc இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 125 டியூக் 14.5hp மற்றும் 12Nm வழங்கும் 124.9cc இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பயனாளிகளுக்கு மென்மையான மற்றும் திறமையான பவர் டெலிவரியை உறுதி செய்கிறது.
எந்த நிறங்களில் கிடைக்கும்?
கே.டி.எம்., 250 டியூக் பைக் மாடல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்திலும், கே.ட்.எம்., 125 டியூக் பைக் மாடல் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விவரங்கள்:
அதேநேரம், இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை. இருப்பினும், நடப்பாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விற்பனைக்கு வரும்போது, 2024 கேடிஎம் 250 மற்றும் 125 டியூக்கின் இந்தியா-ஸ்பெக் மாடல்களில் பிராண்டின் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக சில அம்சங்கள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி இருப்பினும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் உற்சாகமான சவாரி அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. அதோடு, விலையைப் பொறுத்தவரை, புதிய 250 டியூக் மற்றும் 125 டியூக் விலை இந்திய சந்தையில் முறையே ரூ. 2.60 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI