Kinetic E-Luna: கைனெடிக் கிரீன் நிறுவனத்தின் புதிய லூனா மின்சார ஸ்கூட்டரின் விலை, ரூ. 69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கைனெடிக் மின்சார ஸ்கூட்டர்:


இந்தியாவில் பிரபலமான லூனா பெயரை கொண்டு உருவாக்கப்பட்ட, புதிய மின்சார ஸ்கூட்டரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வாகனத்திற்கான முன்பதி, 500 ரூபாய் கட்டணத்துடன் கடந்த குட்யிஅரசு தினத்தன்று தொடங்கியது. அதுமுதல் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைனெடிக் மின்சார ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக கைனெடிக் கிரீன் தெரிவித்துள்ளது. வாகனத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது முன்பதிவு செய்யலாம். விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களிலும் இந்த வாகனத்தை விலைக்கு வாங்கலாம்.


பேட்டரி, வாகன விலை விவரங்கள்:


69 ஆயிரத்து 990 ரூபாய் என்ற விலையில், E-Luna மிகவும் மலிவுவிலை மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகும். இ-லூனா 150 கிலோ பேலோட் திறன் கொண்டது மற்றும் 2.0 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிலோ மிட்டர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-லூனா அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். விரைவில் 1.7 kWh மற்றும் பெரிய 3.0 kWh பேட்டரி பேக்குகளை கொண்ட, புதிய வேரியண்ட்களையும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் அதிகபட்சமாக 150 கிமீ வரம்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.  ஸ்வாப்பபிள்  பேட்டரி விருப்பங்களைப் பெறும்போது E-Luna வேகமாக சார்ஜிங் இணக்கமாக உள்ளது.


 இ - லூனாவின் சிறப்பம்சங்கள்:


அம்சங்களின் அடிப்படையில், இது நிகழ்நேர டிடிஇ அல்லது "டிஸ்டன்ஸ் டு எம்ப்டி" ரேஞ்ச் இண்டிகேட்டர் மற்றும் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன், 16 இன்ச் வீல்கள், யூ.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், மூன்று ரைடிங் மோடுகள், பிரிக்கக்கூடிய பின் இருக்கை மற்றும் பக்க நிலைப்பாடு சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும்,  கைனெடிக் க்ரீன், E-Luna இன் மொத்த உரிமைச் செலவு ரூ.2,500க்கும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  2,500 ரூபாய் தொடங்கி ரூ.2000 மற்றும் ரூ.300 வரையிலான மாதத்தவணை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


சார்ஜிங் நேரம்:


E-Luna ஒரு செயல்பாட்டுத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. எளிமையானது மற்றும் சிறியது, அதே நேரத்தில் அது அகற்றக்கூடிய இருக்கையையும் கொண்டுள்ளது. மொத்தமாகவே 96 கிலோ எடையை மட்டுமே கொண்டிருக்கும் இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பேசிக் மாடல் மற்றும் பயன்மிக்கதாக இருந்தாலும், E-Luna ஆனது ஒழுக்கமான மற்றும் தேவையான அம்சங்களைக் கொண்டுள்ளது. E-Luna ஸ்கூட்டரானது மல்பெரி ரெட், ஓஷன் ப்ளூ, முத்து மஞ்சள், பிரகாசிக்கும் பச்சை மற்றும் நைட் ஸ்டார் பிளாக் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI