Kia Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கியாவின் 2026-க்கான புதிய ப்ளான்
இந்திய ஆட்டொமொபைல் சந்தையில் கூலான ஸ்டைல் மற்றும் கவனத்தை ஈர்க்கும் டிசைன் காரணமாக, மிகக் குறுகிய காலத்திலேயே கியா நிறுவனம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. நடப்பாண்டில் சில புதிய கார்களை அறிமுகப்படுத்தியது போலவே, அடுத்த ஆண்டிலும் முற்றிலும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எடிஷன்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் எஸ்யுவி தொடங்கி புதிய மின்சார காரும் அடங்கும். அவை குறித்து தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
2026ல் விற்பனைக்கு வரவுள்ள கியா கார்கள்
1. கியா செல்டோஸ்
கியா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை செல்டோஸ் கார் மாடலை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, 2026ம் ஆண்டில் நிறுவனத்தின் முதல் மாடலாக, ஜனவரி 2ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டுள்ள இதன் விலை 12 லட்சத்தில் தொடங்கி 22 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடும். தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய எடிஷன் அளவில் சற்று பெரியதாகும். இதனால் அதிகப்படியான கேபின் ஸ்பேஸ் கிடைக்கும். உட்புறமும் முற்றிலும் புதியதாக அப்க்ரேட் செய்யப்பட்டு, சைரோஸிலிருந்து ட்ரினிட்டி பனோரமிக் டிஸ்பிளேவை கடனாக வாங்கியுள்ளது.
இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி தற்போதைய எடிஷனில் உள்ள, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளது. 2027ம் ஆண்டில் இந்த காரில் ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
2. கியா சைரோஸ் மின்சார எடிஷன்
இந்திய சந்தையில் ஏற்கனவே இன்ஜின் எடிஷனில் அசத்தி வரும் சைரோஸ் கார் மாடலை, மின்சார எடிஷனில் கொண்டு வர கியா திட்டமிட்டுள்ளது. 2026ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஹுண்டாயின் இன்ஸ்டெர் கார் மாடலுக்கான K1 ப்ளாட்ஃபார்மில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அந்த மாடலில் உள்ள அதே 42kWh மற்றும் 49kWh பேட்டரி ஆப்ஷன்களை பயன்படுத்துகிறது. சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும். சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாகனம் பாக்ஸி தோற்றத்தை கொண்டிருந்தாலும், மின்சார எடிஷனுக்கு என தனித்துவமான க்ளாவிஸ் EV-யில் இருப்பது போன்ற ப்ளாங்க்ட் அவுட் க்ரில் வழங்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தைப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சைரோஸ் மின்சார எடிஷனின் விலை, 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
3. கியா சொரெண்டோ
கியா நிறுவனம் உள்ளூரிலேயே உற்பத்தி செய்து அல்லது முற்றிலும் புதிய எஸ்யுவி ஆக சொரெண்டோவை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது உள்ளூரில் ஜீப் மெரிடியன் மற்றும் டொயோட்டா ஃபார்ட்சுனர் கார்களுடன் போட்டியிடும். சர்வதேச சந்தையில் சொரெண்டோவானது கியாவின் பரிட்சையமான டிசைன், வெர்டிகலி ஓரியண்டட் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லைட்ஸ், அகலமான ரெக்டேங்குலர் க்ரில் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளன. உட்புறத்தில் கர்வ்ட் டிஸ்பிளேவை கொண்ட இரட்டை 12.3 இன்ச் ஸ்க்ரீன், லெவல் 2 ADAS இணைக்கப்பட்டுள்ளது. இதன் 2,815 மிமீ வீல்பேஸ் ஏழு இருக்கைகளுக்கு இடமளிக்க உதவுகிறது.
இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் எடிஷனில் பவர்ட்ரெய்ன்களில் இரண்டு கலப்பினப்படுத்தப்பட்ட 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல்கள் - ஒன்று பிளக்-இன் ஹைப்ரிட் - மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவை அடங்கும். 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை சுமார் ரூ.35 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI