பலரும் எதிர்பார்த்த செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை வெளியிட்டு கடுமையான போட்டி நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா மோட்டார்ஸ் மீண்டும் ஒரு காரை இறக்கி, பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.


செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்


இந்த புதிய SUV அற்புதமான பல புதிய அம்சங்களை வழங்குகிறது. செல்டோஸ் 2023க்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி தொடங்க உள்ளது. 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மூன்று வேரியன்ட்களில் வருகிறது. எக்ஸ்-லைன், ஜிடி லைன் மற்றும் டெக் லைன் என்ற பெயரில் வந்துள்ளது. புதிய செல்டோஸ் காரில் 17 அதிநவீன அம்சங்களைக் கொண்ட மிக மேம்பட்ட நிலை 2 ADAS பொருத்தப்பட்டுள்ளது. ADAS இன் இந்த நிலை பொதுவாக இந்தியாவில் EV6 போன்ற சூப்பர் பிரீமியம் கார்களில் காணப்படுகிறது. கூடுதலாக, செல்டோஸ் 15 வலுவான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட, 32 பொது பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பாதுகாப்பு மேம்பாடுகள் மூலம், SUV அதன் பிரிவில் பாதுகாப்புக்கான புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது.



பாதுகாப்பு அம்சங்கள்


ADAS அம்சங்களுடன், Kia India புதிய செல்டோஸில் "ரோபஸ்ட் 15 ஸ்டாண்டர்ட் சேஃப்டி பேக்" கொண்டுள்ளது, இதில் 15 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இவை நிலையான 6 ஏர்பேக்குகள் மற்றும் 3 பாயின்ட் சீட் பெல்ட்களை உள்ளடக்கி உள்ளன. வாகனம் 11 ஆக்டிவ் சேஃப்டியையும் கொண்டுள்ளது. ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம்), பிஏஎஸ் (பிரேக் ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம்), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ஈஎஸ்சி (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்) மற்றும் விஎஸ்எம் (வெஹிக்கில் ஸ்டபிலிட்டி மேனேஜ்மெண்ட்) போன்ற அம்சங்கள் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..! வானிலை நியூ அப்டேட்..!


டிஸ்ப்ளே


இந்த வாகனம் 10.24-இன்ச் HD டச்ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டத்துடன் கூடிய பெரிய டூயல் ஸ்கிரீன் பனோரமிக் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதோடு, முந்தைய மாடலின் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை மாற்றியமைத்து, 10.25-இன்ச் கலர் எல்சிடி எம்ஐடி டிஸ்ப்ளே கொண்ட புதிய ஃபுல் டிஜிட்டல் க்ளஸ்டரைகொண்டுள்ளது.



உயர்தர அனுபவம்


இந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகள் எதிர்கால அனுபவத்தை உருவாக்கி வாகனத்தின் பிரீமியம் கவர்ச்சியை உயர்த்துகிறது. கூடுதலாக, புதிய செல்டோஸ் ஸ்மார்ட் 8-இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 8-வே பவர் டிரைவர் இருக்கையுடன் கூடிய காற்றோட்ட இருக்கைகள், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதுகாப்புடன் கூடிய ஸ்மார்ட் ப்யூர் ஏர் பியூரிஃபையர் மற்றும் பிளைண்ட் வியூ கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றை வழங்குகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI