RasiPalan Today July 05:


நாள்: 05.07.2023 - புதன்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றி அமைப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


பணிபுரியும் இடத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறு சிறு அலைச்சல்கள் தோன்றி மறையும்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். தாமதங்கள் விலகும் நாள்.


மிதுனம்


திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.


கடகம்


தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


சிம்மம்


மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.


கன்னி


நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கலை சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் வெளிப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.


துலாம்


வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள்.  கல்வி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  திறமைகள் வெளிப்படும் நாள்.


விருச்சிகம்


மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த குழப்பம் விலகும். சகோதரர் வகையில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு


தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். புதிய வீடு நிமிர்த்தமான கடன் உதவிகள் சாதகமாகும். அமைதி நிறைந்த நாள்.


மகரம்


செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வாய்ப்புகளில் சிந்தித்துச் செயல்படவும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். திட்டமிடாத பயணங்கள் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தெளிவு பிறக்கும் நாள்.


கும்பம்


வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.


மீனம்


குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும்.  மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.