இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வருகின்ற டிசம்பர் 16ல் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியாவின் கேரன்ஸ் ரகக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தியாவின் சாலைகளுக்கு ஏற்றவகையில் மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட கார்களாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியக் குடும்பங்களுக்கானது இந்தக் கார் மாடல் என கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தே-ஜின்-பார்க் தெரிவித்துள்ளார்.  2022ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் இந்தக் கார்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே இந்தக் காரின் வடிவமைப்பு டிசம்பர் 16ல் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தே-ஜின்-பார்க் கூறுவது போல இந்தியச் சந்தைகளில் இது கேம்- சேஞ்சராக இருக்குமா? 






கியாவின் செல்டோஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது இந்தக் கார்கள். ஒரு எஸ்யூவி வாகனத்தில் என்னவிதமான தொழில்நுட்பங்கள் இருக்குமோ அதனை ஒரு ஸ்மார்ட் கார் வகையறாவாக வழங்குகிறது கியா. கேரனுக்கு எனத்தனியே செண்டர் கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங், டெக் யுவிஓ, 360 டிகிரி கேமிரா, சன் ரூஃப், காற்றோட்டமான இருக்கைகள், ஆகியன இதன் தனித்துவம். இரண்டாவது வரிசையில் தனியே கப் வைப்பதற்கான இடம் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் வசதியுடன் இது இன்னோவா கிரிஸ்டா மற்றும் எக்ஸ் எல் 6 ரக வாகனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேனுவலாகவும் ஆட்டோமேட்டிக்காவும் இயங்கக்கூடியது. செல்டோ ரகங்களைப் போல இதில் டர்போ பெட்ரோல் வசதி இல்லை. 


எது எப்படி இருந்தாலும் கியா நிறுவனம் இந்தப் புதிய ரகத்தை பொழுதுபோக்கு வாகனமாக வகைபடுத்தியுள்ளது. பொருளாதாரம் தற்போதுதான் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையேறி வரும் நிலையில் பொழுதுபோக்குக்காக கார்கள் வாங்குபவர்கள் யாராவது இருந்தாச் சொல்லுங்கப்பா!


Car loan Information:

Calculate Car Loan EMI